பில்கிஸ் பானோ வழக்கில் `குற்றவாளிகளின் விடுதலை மனித குலத்தை அவமதிக்கும் செயல்’ என 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஆகஸ்ட் 24-ம் தேதி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். அதில், ``பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, வாழ்நாள் முழுதும் அவளின் ஆன்மாவில் ஏற்பட்ட வடுவுக்கு, அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதில் ஈடுபட்ட எந்த மனிதனும் விடுதலையாகக் கூடாது. அப்படிச் செய்தால் அது மனித குலத்துக்கும் பெண்மைக்கும் அவமானம். பில்கிஸ் பானோ அல்லது எந்தவொரு பெண்ணுக்கும், அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு ஆதரவு தேவை’’ என்று ட்வீட் செய்துள்ளார்.
கோத்ரா கலவரத்தின்போது, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த வழக்கில், 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக் காலம் முடியும் முன்பே, குஜராத் அரசால் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் விடுதலை குறித்து குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட நிவாரணக் குழுவில் பா.ஜ.க-வை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர்.
A woman who is raped, assaulted, brutalised and her soul scarred for life must get justice. No man who has been involved in it should go free. If he does so, it's an insult to humankind and womanhood. #BilkisBano or any woman, needs support, beyond politics n ideologies. Period.
— KhushbuSundar (@khushsundar) August 24, 2022
இவர்கள் குற்றவாளிகளின் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தனர். மேலும், இந்தக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது, அவர்களுக்கு மாலை அணிவித்து நாட்டின் தலைவர்களைப் போல வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக பொது நல வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மேலும், 11 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்கவும், உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பா.ஜ.க-வின் முடிவுக்கு எதிராக, அக்கட்சியில் இருக்கும் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/3n6CYob
0 Comments