80 ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஒளிரும் கிராமம்! - உற்சாகத்தில் பழங்குடிகள்

இந்தியா சுதந்திரமடைந்த கிட்டத்தட்ட 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது, ஆனாலும் கூட நாட்டின் பல்வேறு பழங்குடியின கிராமங்கள் முழுமையாக மின்சார வசதி, சாலை வசதி என அடிப்படை வசதி கூட பெறாமல் இருக்கிறது. இருப்பினும் அதனை நிவர்த்தி செய்வதற்கான வேலைகளும் ஒருபுறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் மத்திய அரசின் செயல்பாட்டால், கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்த கிராமம் ஒன்று வெளிச்சம் பெற்றிருக்கிறது.

சூரிய ஒளி மின்சாரம்

திரிபுரா மாநிலத்தின் கோவாய் மாவட்டத்தில் பழங்குடிகள் வாழும் சர்கிபாரா எனும் கிராமம், சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் மிளிரத் தொடங்கியிருக்கிறது. இதன் மூலம், அந்தக் கிராமத்தின் குழந்தைகள் சூரிய மறைவுக்குப் பின்னரும் மின்சார விளக்குடன் சிரமமின்றி படிக்க தொடங்கியிருக்கின்றனர். அதேசமயம் இரவில் மின்சார வெளிச்சத்தில், ஆண்கள் மூங்கிலாலான பாரம்பரிய கைவினைப்பொருள்களையும், பெண்கள் பழங்குடி ஆடைகளை நெசவு செய்கிறார்கள். இதன்மூலம் அவர்களின் பொருளாதாரமும் வளரத் தொடங்கியிருக்கிறது.

நரேந்திர மோடி

இதுகுறித்து பேசிய அரசு அதிகாரியொருவர், ``கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காகக் கடந்த ஆண்டு திரிபுராவின் 11 தொலைதூர கிராமங்களில் தலா 2 கிலோவாட் மைக்ரோகிரிட் மின் நிலையம் நிறுவப்பட்டது. அதில் சர்கிபாராவும் ஒன்று. இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக கடந்த ஜூலை 30 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்” என்றார்.

மேலும் இதுதொடர்பாக கிராமவாசி ஒருவர், ``அதரமுரா மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த சோலார் ஆலை, கிராமத்தின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்திருக்கிறது. இப்போது இரவில் கூட கைவினைப்பொருள்கள் செய்யலாம். பெண்கள் ரைசா, பச்சராவை(பழங்குடி பெண்கள் அணியும் ஆடைகள்) நெய்யலாம். மாலையில் ஒன்றுகூடி மின்சாரத்தால் டி.வி பார்க்கலாம்" என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



from Latest News https://ift.tt/3B1wzlL

Post a Comment

0 Comments