பெரம்பலூர்: மளிகை கடைக்குச் சென்றது குட்கா சோதனைக்கு... சிக்கியதோ டெட்டனேட்டர் குச்சிகள்!

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் நாராயணசாமி. இவர், அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரின், மகன் மகேந்திரன் மளிகைக் கடையில அப்பாவிற்கு உதவியாக இருந்து வருகிறார்.

பெரம்பலூர்

இந்நிலையில், நாராயணசாமியின் மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்வதாகப் பெரம்பலூர் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் போலீஸார் மளிகைக் கடைக்குச் சென்று சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது, மளிகைக் கடையில் 170 டெட்டனேடர் குச்சிகளைப் பார்த்ததும் போலீஸார் அதிர்ந்து போனார்கள். உடனே இதுகுறித்து பெரம்பலூர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார்.

பெரம்பலூர் போலீஸார்

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்து தந்தை, மகன் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திவருகிறார்கள். மளிகைக்கடைக்குள் டெட்டனேட்டர்கள் எப்படி வந்தது. ஏதேனும் நாச வேலைக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டார்களா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்

இது குறித்து வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். ``திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் கல்குவாரி நடத்தி வந்தார். அவரின் கல்குவாரியில் தான் மகேந்திரன் வேலை பார்த்து வருகிறார்.

பெரம்பலூர் கல்குவாரி

இந்நிலையில், கடந்த மாதம் கல்குவாரியில் இருவர் உயிரிழந்த நிலையில், உரிமம் இல்லாத குவாரிகளை ஆட்சியர் மூட உத்தரவிட்ட நிலையில் கடந்த 29-ம் தேதி கல்குவாரியை மூடிவிட்டார்கள். பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக வைத்திருந்த டெட்டர்னேட்டர்களை மகேந்திரன் கொண்டு வந்து அவரின் மளிகைக் கடையில் வைத்து இருக்கிறார் அவ்வளவு தான். இருவரையும் அழைத்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.



from Latest News https://ift.tt/mwNnkUP

Post a Comment

0 Comments