நெருங்கும் குஜராத் தேர்தல்: முன்னாள் அமைச்சர், எம்.பி காங்கிரஸிலிருந்து விலகி பாஜக-வில் சேர திட்டமா?

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் குஜராத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கு ஆயத்தமாக ஆம் ஆத்மி இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்குத் தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்துவருகிறார். இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் பக்கமோ அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

பாஜக - காங்கிரஸ்

முன்னதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, உட்கட்சி பூசல் காரணமாகக் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் கட்சியிலிருந்து விலகி அதிரடியாக பா.ஜ.க-வில் சேர்ந்தார். இதற்கிடையில், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு ஷர்மாவும், ஹர்திக் படேலும் ஒருவரையொருவர் விமர்சித்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும், ரகு ஷர்மா மற்றும் கட்சித் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

முன்னாள் உள்துறை அமைச்சர் நரேஷ் ராவல்

இதன் காரணமாக, முன்னாள் உள்துறை அமைச்சர் நரேஷ் ராவல் மற்றும் எம்.பி ராஜு பர்மர் ஆகியோர் காங்கிரஸிலிருந்து விலகவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கு கிட்டத்தட்ட 4 மாதங்களே இருக்கும் நிலையில், நரேஷ் ராவல், எம்.பி ராஜு பர்மர் ஆகியோர் பா.ஜ.க-வில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கட்சியில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், இத்தகைய செய்தி வெளியாகியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest News https://ift.tt/SLMyjOB

Post a Comment

0 Comments