`மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் மதுக்கடைகள் கூடாது’ - விவசாயிகள் வலியுறுத்தல்!

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மரக்கன்றுகள் மற்றும் உழவு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காய்கறி செஸ் போர்டு

விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைந்த பொருள்களை கண்காட்சிக்கு வைத்திருந்தார்கள். அதை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அந்த கண்காட்சியில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியில், காய்கறிகள் மூலம் உருவாக்கப்பட்ட செஸ் போர்டு, காய்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செஸ் போட்டிக்கான லோகோ காய்கறிகள் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவங்களும் காய்கறிகள் மூலம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியை பார்வையிடும் ஆட்சியர் விஷ்ணு

மேக்கரை பகுதியில் நீர் வரத்தை தடை செய்து தனியார் அருவிகள் செயற்கையாக அருவிகள் அமைக்கப்பட்டிருந்ததை அகற்றக்கோரிய தங்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு அனைத்து விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். அப்படிச் செய்யாவிட்டால், மது குப்பிகளுக்கு 10 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/YK4hGuV

Post a Comment

0 Comments