குமரி: போலீஸ் மிரட்டியதாக இளைஞர் விஷம்குடித்து தற்கொலை - இன்ஸ்பெக்டர் மீது புகார்!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி மேலரத வீதியை சேர்ந்தவர் வினிஸ். உள்ளூரில் கேபிள் டிவி ஆபரேட்டரகாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழில் ரீதியாக சிலருடன் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 2017-ல் பூதப்பாண்டியில் நடந்த கொலை சம்பவம் ஒன்றில் தொடர்பு உள்ளதாக அந்த சமயத்தில் வினிஸ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் கேபிள் டிவி தொடர்பான பிரச்னை ஒன்றில் வினிஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட வினிஸ் கடந்த 5-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் சாட்சிகளை மிரட்டுவதாக கூறி மற்றொரு வழக்கில் வினிஸை பூதப்பாண்டி போலீஸார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த வினிஸ் நெல்லை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த தாய்

இந்நிலையில் ஒருபுறம் பூதப்பாண்டி போலீஸார் மிரட்டுவதாகவும், மற்றொருபுறம் வழக்கறிஞர் மிரட்டுவதால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு ஆற்றின் கரையோரமாக விஷம் குடித்து வினிஸ் தற்கொலை செய்துள்ளார். வினிஸ் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வினிஸின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது வினிஸின் தாய் உஷா மயங்கி விழுந்ததால் அவரை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து போலிஸார் வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்ற முயற்சித்ததால் ஊர் மக்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மயங்கிய் வினிஸின் தாய்

பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸ் அதிகாரியும் காவலர் ஒருவரும் பணியின்போது அசந்து தூங்கும் வீடியோ ஒன்றை வினிஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறபடுகிறது. இதையடுத்து தன்னை காவலர்கள் மிரட்டுவதாக வினிஸ் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துராஜ் மீது வினிஸின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.



from Latest News https://ift.tt/HLt9Gnr

Post a Comment

0 Comments