தலைக்கேறிய போதை... காவல் நிலையத்தில் ரகளை செய்த இளைஞர்! - வைரலாகும் வீடியோ

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட சக காவலர்கள் நேற்று பணியில் இருந்தனர். அப்போது பொது இடத்தில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் மேல் சட்டை இல்லாமல் அரை நிர்வாணக் கோலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிவதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், போதையில் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்தவர் அதேப் பகுதியைச் சேர்ந்த குட்லக் என்ற மாரிச்செல்வம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போதை தெளியும்வரை அவரை, காவல் நிலையத்தில் வைக்க முடிவுசெய்து மாரிச்செல்வத்தை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்திருக்கின்றனர்.

ரகளை

ஆனாலும் அவர், காவல் நிலையத்திலும் தன் வேலையைக் காட்டியிருக்கிறார். போதை தலைக்கேறிய நிலையில், போலீஸ் என்றும்கூட பாராமல் காவல் நிலையத்தில் பணியிலிருந்த அதிகாரிகள், காவலர்கள் என அனைவரையும் ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டியிருக்கிறார். இதையெல்லாம் வீடியோவாகப் பதிவுசெய்த போலீஸாரிடமும் மாரிச்செல்வம் திமிராக நடந்துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

போதை நபர்

போதையில் தன் நிலை மறந்து காவல் நிலையத்துக்குள் அட்டகாசம்செய்த மாரிச்செல்வத்தை ஒருவழியாக காவலர்கள் சத்தம்போட்டு அமரசெய்யும் வரை நீள்கிறது அந்த வீடியோ. இறுதியாக, மாரிச்செல்வத்தின் அம்மாவுக்குத் தகவல் தெரிவித்து, அவர் வந்தபின்பு மாரிச்செல்வத்தை எச்சரித்து போலீஸார் அனுப்பிவைத்திருக்கின்றனர். போதை ஆசாமி காவலர்களை மிரட்டும் தொணியில் ஆபாசமாகப் பேசியும்கூட அவர்மீது நடவடிக்கை எடுக்காமல், போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்ததற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



from Latest News https://ift.tt/8tGCMxE

Post a Comment

0 Comments