அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்கனவே கோயில் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. அந்த நிலத்தை ராமர் கோயில் டிரஸ்ட் நிர்வாகம் அதிக விலை கொடுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அயோத்தியில் மேயரின் உறவினர் உட்பட சில முக்கிய பிரமுகர்கள், நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ராமர் கோயில் கட்ட அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டி இருந்தது. தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அமைந்துள்ளது.
அயோத்தி மேம்பாட்டு ஆணையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி மேயர் ரிஷிகேஷ், அயோத்தி பாஜக எம்.எல்.ஏ. வேத் பிரகாஷ் குப்தா உட்பட 40 பேர் அயோத்தியில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் துணைத்தலைவர் விஷால் சிங் அளித்த பேட்டியில், ``அயோத்தி மேயர் உட்பட 40 பேர் தனியார் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் அதிகப்படியான வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்ட வீடுகள் விரைவில் இடிக்கப்படும். சட்டவிரோத நில அபகரிப்பில் ஈடுபட்ட 40 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். ஆனால் இக்குற்றச்சாட்டை அயோத்தி மேயர் ரிஷிகேஷ் மற்றும் எம்.எல்.ஏ.குப்தா ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அயோத்தி மேம்பாட்டு ஆணையத்துக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.
பாஜக எம்.பி.லல்லு சிங் என்பவரும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ``அயோத்தியில் நில மாஃபியாக்கள் அதிகமான இருக்கின்றனர். அரசு நிலத்தை சட்டவிரோதமாக மக்களை ஏமாற்றி அயோத்தி பெயரை சொல்லி விற்பனை செய்து வருகின்றனர். எனவே நில மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நில மோசடியில் முன்னாள் அரசு அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
நில அபகரிப்பு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான மஹந்த் ராஜு தாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அயோத்தியில் அரசு நிலத்தை அபகரித்து 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு காலனிகள் கட்டப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
from Latest News https://ift.tt/X34ris2
0 Comments