எலக்ட்ரிக் டூத் பிரஷ் பற்றி நிறைய விளம்பரம் பார்க்கிறேன். அதை உபயோகிப்பது சரியானதா? அதை யாரெல்லாம் பயன்படுத்தலாம்? அதன் சாதக, பாதகங்கள் என்னென்ன? எந்த வயதினர் உபயோகிக்கலாம்?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி
டூத் பிரஷ்ஷில் சாஃப்ட், மீடியம், ஹார்டு பிரிஸில்ஸ் கொண்டவை, ஆர்தோடாண்டிக் பிரஷ், எலக்ட்ரிக் பிரஷ் என பல வகைகள் உண்டு. எலக்ரிகல் டூத் பிரஷ்ஷின் சாதகமான விஷயம், அதனுள் பொருத்தப்பட்டிருக்கும் டைமர்.
நாம் எத்தனை நிமிடங்களுக்குப் பல் துலக்க நினைக்கிறோமோ, அந்த நேரத்தை அதில் செட் செய்ய முடியும். கூடவே அதில் தண்ணீரைச் செலுத்தும் வசதியும் இருக்கும்.
பக்கவாதம பாதித்தவர்கள், நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்றோர் எலக்ட்ரிக் டூத் பிரஷ்களை பயன்படுத்தலாம். ஏனெனில் இவர்களுக்கெல்லாம் சாதாரண டூத் பிரஷ் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும் என்பதால் எலக்ட்ரிக் பிரஷ் பரிந்துரைக்கப்படும்.
சாதாரண டூத் பிரஷ் பயன்படுத்தும்போது பல் இடுக்குகளை அது முழுமையாகச் சுத்தம் செய்யாமலிருக்கலாம். அதுவே எலக்ட்ரிக் டூத் பிரஷ் பயன்படுத்தும்போது பற்கள் சுத்தமாவது இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்த பிரஷ்ஷை பயன்படுத்துவதில் பாதகங்களும் உண்டு. சாதாரண டூத் பிரஷ் என்றால் மூன்று மாதங்களுக்கொரு முறை அதை மாற்றிவிட்டு, புதிய பிரஷ் பயன்படுத்துவோம். அதுவே எலக்ட்ரிக் டூத் பிரஷ்ஷில் அதன் தலைப்பகுதியை மாற்ற வேண்டியிருக்கும்.
அதற்குச் செலவு செய்வது எல்லோருக்கும் சாத்தியமாகாமல் இருக்கலாம். அதைப் பயன்படுத்தும் முறையிலும் சாதாரண பிரஷ்ஷைவிட அதிக கவனம் கொடுக்க வேண்டியிருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/kWhN52c
0 Comments