65 வயது பெண்ணின் வயிற்றில் 55 பேட்டரிகள்... மன அழுத்தத்தால் பெண் எடுத்த விபரீத முடிவு!

அயர்லாந்தில் உள்ள மருத்துவர்கள், 65 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 55 ஏஏ, ஏஏஏ வகை பேட்டரிகளை அகற்றியிருக்கின்றனர். இது தொடர்பாக மருத்துவர்கள், ``மன அழுத்தம் காரணமாக 65 வயது பெண் ஒருவர் இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் வேண்டுமென்றே பேட்டரிகளை விழுங்கியிருக்கிறார். வயிற்றுவலி என டப்ளினில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பேட்டரி

சிகிச்சையின் ஆரம்பத்தில் பேட்டரிகள் அனைத்தும் மலக்குடல் வழியாக வெளியேறிவிடும் என காத்திருந்தோம். அடுத்தடுத்த ஸ்கேன்களில் பெரும்பாலானவை அவரது வயிற்றிலேயே இருந்துவிட்டன. முதல் வாரத்தில் ஐந்து ஏஏ பேட்டரிகளை மட்டுமே மலக்குடல் வழியாக வெளியே வந்தது. பேட்டரிகளின் அதிக எடையின் காரணமாக, விரிந்த வயிறு அந்தரங்க எலும்பின் மேல் தொங்கியது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அறுவைசிகிச்சை நிபுணர்கள் அவரின் வயிற்றில் ஒரு சிறிய துளையிட்டு 46 பேட்டரிகளை அகற்றினர். பெருங்குடலில் சிக்கிய மீதமுள்ள நான்கு பேட்டரிகள், அவரின் மலக்குடல் ஆசனவாய் வழியாக அகற்றப்பட்டன - மொத்தமாக விழுங்கப்பட்ட பேட்டரிகளின் எண்ணிக்கையை 55ம் வெளியெடுக்கப்பட்டது. அனைத்து பேட்டரிகளூம் ஒரே நேரத்தில் உட்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆச்சரியப்படும் விதமாக, இந்த மின்வேதியியல் சாதனங்கள் எதுவும் அவரது இரைப்பை குடலை பாதிக்கவில்லை. மேலும் அவரின் உடலுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தனர்.



from Latest News https://ift.tt/q6ptfKm

Post a Comment

0 Comments