டெல்லியின் நொய்டா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு அக்பர் அலி என்ற 75 வயது முதியவர் திருமணமான தன் மகளை பார்க்க வந்திருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டு 3 வயது சிறுமியிடம், சாக்லேட் வாங்கி தருவதாகக் கூறி சிறுமியை தனியே அழைத்துச் சென்று, டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பிறகு சிறுமி பெற்றோரிடம் நடந்ததைக் கூறிய பின் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறை அக்பர் அலியை கைது செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த அக்பர் அலிக்கு, சூரஜ்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ரூ.50,000 அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
இதே போன்ற சம்பவத்தில், ஏழு மாத பெண் குழந்தையை டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நொய்டாவைச் சேர்ந்த 50 வயது மனோஜ் லாலா என்பவரும், கடந்த ஆண்டில், 80 வயதான கலைஞர் ஒருவர் ஒரு சிறுமியை ஏழு ஆண்டுகளாக டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட முதல் தண்டனை, அக்பர் அலியின் வழக்கில் வழங்கப்பட்ட தண்டனை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்றால் என்ன?
டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது அந்தரங்க உறுப்பில் சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி கை மற்றும் கால் விரல்களை நுழைப்பது. ஆங்கிலத்துல் டிஜிட் என்பது விரல்களை குறிக்கிறது. எனவே இந்த குற்றத்துக்கு 2012-ம் ஆண்டு முதல் `டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ எனப் பெயரிப்பட்டிருக்கிறது. டெல்லியில் நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.
அதில் ஒன்றுதான் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை'யும் குற்றம் என்ற சட்டம். இந்தச் சட்டம் IPC பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) ஆகிய சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன் இது போன்ற குற்றம் ஒரு மானபங்கச் செயலாக பார்க்கப்பட்டதே தவிர, பாலியல் வன்கொடுமை என்ற சட்டப்பூர்வ வரம்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
from Latest News https://ift.tt/TDbx5L6
0 Comments