ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து ட்ரெண்ட் ஆகும். அந்த வகையில் இன்று உலக அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருப்பது `ஒரு வார்த்தை ட்வீட்'. அமெரிக்காவைச் சேர்ந்த `ஆம்ட்ராக்' என்ற ரயில் நிறுவனம் தங்களுக்குப் பிடித்த வார்த்தையாக தங்களின் பணிகளை வெளிப்படுத்தும் வார்த்தையாக `trains' என்ற வார்த்தையை ட்வீட் செய்திருந்தது. இதையடுத்து பலரும் தங்களை கொள்கைகளை, பணிகளை, விருப்பங்களை அடையாளப்படுத்தக் கூடிய `ஒரு வார்த்தையை' தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றன.
இதில் சுவாரசியம் என்னவென்றால் உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை இந்த 'ஒரு வார்த்தை' டிவிட்டர் போரில் களமிறங்கியுள்ளனர். அந்தவகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் (democracy) என ட்வீட் செய்தார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஐசிசியின் ட்விட்டர் பக்கம் இரண்டும் கிரிக்கெட் (cricket) என டிவீட் செய்தனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 'universe' டிவீட் செய்துள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இங்கு போட்டிபோட்டு ஒரு வார்த்தையில் டிவீட் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ‘திராவிடம்’ என ட்வீட் செய்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 'தமிழ்நாடு' என்று ட்வீட் செய்துள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு `எடப்பாடியார்’ என ட்வீட் செய்துள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி ஒறுங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ்த்தேசியம்’ எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘தமிழன்’ எனவும் ட்வீட் செய்துள்ளனர். கமல்ஹாசன் `மக்கள்' என ட்வீட் செய்தார் இதுபோல் பலரும் இந்த 'ஒரு வார்த்தை' டிவிட்டர் ட்ரெண்டிங்கில் களம் இறங்கியுள்ளனர்.
உங்களுக்கு தோன்றும் ஒரு வார்த்தையை நீங்கள் கமென்ட் பண்ணுங்க மக்களே!
from Latest News https://ift.tt/tAPWf32
0 Comments