``மீண்டும் ஆய்வுக்கு வருவேன்; அப்போது...” - அதிகாரிகளை எச்சரித்த தலைமைச் செயலாளர்

பருவமழை நெருங்கும் நிலையில் தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளால் மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கூட, சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று (02.10.2022) தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கால்வாய் தூர்வாரும் பணி

சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும், நீர் வழித்தடங்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த ஆய்வுப் பணியின்போது, தலைமைச் செயலாளருடன் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக திருவான்மியூரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கிருந்த கால்வாயில் ஆகாயத் தாமரை அகற்றப்படாமலும், தூர்வாரும் பணி முடிவடையாமலும் இருந்தது. பருவமழை நெருங்கும் சமயத்தில் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு. இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கோவமாகவும் பேசியுள்ளார்.

தலைமைச் செயலாளர் ஆய்வு

அப்போது அதிகாரிகளிடம் பேசிய இறையன்பு, ``நீங்கள் மனசு வைத்திருந்தால் எந்த பணிகளை எப்போதோ முடித்திருக்கலாம். பணிகளைப் போர்க்கால அடிப்படியில் மேற்கொள்ளவில்லை என்றால், இந்த பருவமழையை நாம் எதிர்கொள்ள முடியாது. இது ஒரே நாளில் பந்தல் போடும் வேலை இல்லை. மீண்டும் வரும் 7-ம் தேதி ஆய்வுக்கு வருவேன் அப்போது பணிகள் சரிசெய்யப்படவேண்டும்" என்று எச்சரிக்கும் விதமாக சொல்லியுள்ளார்.



from Latest News https://ift.tt/mJoCKe1

Post a Comment

0 Comments