உலகின் மிக உயரமான சிவபெருமான் சிலை இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்ஸ்மண்ட் என்னும் மாவட்டத்தில் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர் ஜோஷி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த உயரமான சிவபெருமான் சிலை குறித்த முக்கிய குறிப்புகள் இதோ உங்களுக்காக...
1) இந்தச் சிலை சுமார் 369 அடி உயரம் கொண்டது. இதுவே உலகின் மிக உயரமான சிவபெருமான் சிலை என்று சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் 251 அடி என்று திட்டமிடப்பட்ட இந்த சிலை முடிவுறும் தறுவாயில் 351 அடியாக அமைந்தது. ஜடா முடியில் கங்கைபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன் இதன் மொத்த உயரம் 369 அடியானது என்கிறார்கள்.
2) இந்தச் சிலை உதய்ப்பூரிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.
3) சிலை திறப்பை ஒட்டி, தொடர்ந்து ஒன்பது நாள்கள் இங்கு கலாசார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
4) விஸ்வ ஸ்வரூபம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திருமேனியை 20 கி.மீ தொலைவில் இருந்தாலே தரிசிக்கமுடியும்.
5) இரவிலும் இந்தச் சிலையைக் காண வசதியாக சிறப்பு அலங்கார விளங்குகள் பொறுத்தப்பட்டுள்ளன.
6) இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் வழிபாட்டுக்கூடங்கள் ஆகியன கட்டப்பட்டுள்ளன.
7) 3 ஆயிரம் டன் இரும்பு உலோகம், 2.5 கியூபிக் டன் கான்கிரீட் மற்றும் மணல் கலவை ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி நிறைவு பெற 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளது.
8) சிலையின் 270 அடி உயரத்தில் பக்தர்கள் நின்று சுற்றிப் பார்க்கும் வசதி உள்ளது.
9) 280 அடியில் கண்ணாடிப் பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
10) இரவில் பக்தர்கள் கண்டு களிக்க இசை ஊற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.
11) இந்தக் கட்டுமானம் 250 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் இந்தக் கட்டுமானம் பாதிக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ராஜஸ்தானில் சுற்றுலா மேலும் வளர்ச்சிபெறும் என்று நம்பப்படுகிறது.
from Latest News https://ift.tt/SMxFdK1
0 Comments