கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், மாடலாக உள்ளார். கொச்சியில் வசிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தோழி. மாடல் அழகியை ராஜஸ்தான் தோழி நேற்று முன் தினம் இரவு கொச்சி எம்.ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ராஜஸ்தான் பெண்ணின் மூன்று ஆண் நண்பர்களும் சென்றுள்ளனர். அவர்களை மாடல் அழகிக்கும் அறிமுகம் உண்டு. இரவு பார்ட்டியில் மது குடித்த மாடல் அழகி மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அவரை வீட்டில் கொண்டுவிடுவதாககூறி இளைஞர்கள் தார் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது, வேண்டும் என்றே அவரின் தோழியான ராஜஸ்தான் பெண் ஓட்டலிலே நின்றுவிட்டார். ராஜஸ்தான் பெண்ணின் நண்பர்களான மூன்று இளைஞர்கள் மயங்கிய மாடல் அழகியை தார் வாகனத்தில் வைத்து கொச்சி சிட்டியில் பல இடங்களில் சுற்றிய அந்த இளைஞர்கள் மாடல் அழகியை ஓடும் காரில் வைத்தே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் சில மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் ஓட்டலுக்குச் சென்ற இளைஞர்கள் ராஜஸ்தான் தோழியையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காக்கநாடு பகுதியில் சென்றுள்ளனர். அங்குள்ள மாடல் அழகியின் வீட்டில் ராஜஸ்தான் தோழி அவரை நள்ளிரவில் கொண்டு சேர்த்துள்ளார். ராஜஸ்தான் பெண்ணும், அவரின் மூன்று நண்பர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். நேற்று காலையில் மயக்கம் தெளிந்த பெண் இதுபற்றி தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். மாடல் அழகியின் உடல்நிலை மோசமானதைத்தொடர்ந்து அவர் கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்தார்.
தனியார் மருத்துவமனையில் இருந்து காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக களமசேரியில் உள்ள அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜஸ்தான் பெண் மற்றும் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். இளம் பெண் மது குடித்த ஓட்டலில் உள்ள பார் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் பெண் வேண்டும் என்றே திட்டமிட்டு தனது தோழியான மாடலை நண்பர்களுக்கு விருந்தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாடலை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய பயன்படுத்திய தார் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதுச் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை போலீஸ் வெளியிடவில்லை. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்படும்போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் தெரியவரும்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/lYvbJQI
0 Comments