டெல்லியில் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலியை அல்தாஃப் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மேலும் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரூய்பூர் என்ற இடத்தில் வசித்தவர் உஜ்வல் சக்ரவர்த்தி (55). இவர் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது. இவருடைய மகன் ராஜு ஐடிஐ படித்திருக்கிறார்.
உஜ்வல் அடிக்கடி மது அருந்திவிட்டு தன்னுடைய மகனை அடித்து உதைப்பார் என்று கூறப்படுகிறது. ராஜுவிற்கு தேர்வுக்கட்டணம் செலுத்த ரூ.3 ஆயிரம் கொடுக்கும்படி உஜ்வலிடம் அவருடைய மனைவி கேட்டார். ஆனால் பணம் கொடுக்க மறுத்த உஜ்வல் தன் மனைவியை அடித்து உதைத்தார். அந்த நேரம் வீட்டில் இருந்த ராஜு கோபத்தில் தன்னுடைய தந்தையை அடித்ததோடு அவருடைய கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இதையடுத்து ராஜு தன்னுடைய தாயாருடன் சேர்ந்து தன் தந்தையின் உடலை பல துண்டுகளாக வெட்டினார்.
இதற்கு தனது படிப்புக்கு வாங்கிய மர அறுப்பு பிளேடை பயன்படுத்தினார். மொத்தம் 6 துண்டுகளாக வெட்டி அவற்றை ஒவ்வொரு பிளாஸ்டிக் பேக்கில் அடைத்து அருகில் உள்ள குளம் மற்றும் அப்பகுதியில் உள்ள காட்டில் போட்டுவிட்டனர். ராஜு தன்னுடைய சைக்கிளில் எடுத்துச்சென்று உடல்களை போட்டுவிட்டு வந்தார். அதோடு இரவோடு இரவாக உஜ்வலை காணவில்லை என்று தாயும், மகனும் சென்று போலீஸில் புகார் செய்தனர். மறுநாள் குளத்தில் உடல் பகுதிகள் இருந்த பிளாஸ்டிக் கவர்கள் தண்ணீரில் மிதந்தது. ஒரு பிளாஸ்டிக் பேக்கில் உஜ்வல் தலை மற்றும் அவருடைய சட்டை இருந்தது. அவை வெளியில் தெரிந்து கொண்டிருந்தது.
உடனே அப்பகுதி மக்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம், `` தாயும், மகனும் இரவில் வந்து உஜ்வலை காணவில்லை என்று புகார் கொடுத்தது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உஜ்வல் மது பழக்கத்திற்கு ஆளானவர் என்பதால் யாருடனாவது சண்டை போட்டதால் வெளியில் உள்ள ஒருவர்தான் கொலை செய்திருக்கவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் தாய் மற்றும் மகனிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்'' என்றார்.
from Latest News https://ift.tt/DehuSxW
0 Comments