``இந்தியை புரிந்து கொள்ள முடியும்; மொழி பெயர்க்கவேண்டாம்" - ராகுல் காந்தியை இடைமறித்த நபர்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை தற்காலிகமாக இரண்டு நாள்கள் நிறுத்திவிட்டு குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற்றினார். சூரத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் நிறைந்த மஹுவா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியில் பேசியதை ஒருவர் குஜராத்தியில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். அந்நேரம் கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து இந்தியில் தொடர்ந்து பேசும்படியும், எங்களால் இந்தியை புரிந்து கொள்ள முடியும் என்றும், மொழிப்பெயர்ப்பாளர் தேவையில்லை என்று தெரிவித்தார். உடனே முன் வரிசையில் இருப்பவர்களை பார்த்து இந்தி உங்களுக்கு ஓகேவா என்று கேட்டார். உடனே அவர்கள் சம்மதம் என்று கோஷமிட்டனர்.

உடனே ராகுல் காந்தி குஜராத்தி மொழிப்பெயர்ப்பாளர் இல்லாமல் இந்தியில் தொடர்ந்து பேசினார். ``பழங்குடியின மக்கள் தான் நாட்டின் முதல் உரிமையாளர்கள். அவர்களின் உரிமையை பறிக்க பாஜக முயற்சி செய்கிறது. உங்களை அவர்கள் வனவாசி என்று கூறுகின்றனர். உங்களை இந்தியாவின் முதல் உரிமையாளர் என்று சொல்லவில்லை. நீங்கள் நகரங்களில் வாழவேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. உங்கள் குழந்தைகள் டாக்டராகவோ, பொறியாளராகவோ அல்லது விமான பைலட்டாகவோ வரவேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

குஜராத்தை முற்றுகையிட்ட பாஜக தலைவர்கள்

பாஜக தலைவர்கள் குஜராத் தேர்தலுக்காக அம்மாநிலத்தை முற்றுகையிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் சுரேந்திர நகர், நவ்சாரி, ஜாம்புஜார் ஆகிய இடங்களில் மூன்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு கூட்டங்களில் பங்கேற்றார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நேற்று இரவு பிரசார கூட்டங்களில் உரையாற்றினார். ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தெருக்களில் ஊர்வலமாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். இது தவிர பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். ராகுல் காந்தி ராஜ்கோட் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார். குஜராத்தின் தென் பக்தி மற்றும் சவுராஷ்டிராவில் உள்ள 89 தொகுதிகளுக்கு வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டத்தேர்தல் நடக்கிறது. குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி இலவசங்களை கூறி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.



from Latest News https://ift.tt/6UtrADx

Post a Comment

0 Comments