மதுரை: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பெண் தற்கொலை; தீவிர சிகிச்சையில் கணவர் - நடந்தது என்ன?!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியில் வசித்து வந்த அய்யனார்-தனலட்சுமி தம்பதிக்கு 14 வயதான ஹரி கிருஷ்ணன், 12 வயதான குபேந்திர கிருஷ்ணன் என இரு மகன்கள். அருகிலுள்ள பள்ளியில் படித்து வந்த நிலையில்தான் கடந்த 31-ம் தேதி இரவு இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் தனலட்சுமி. அவர் கணவர் அய்யனாரும் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் உள்ளார். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனலட்சுமி-அய்யனார் குழந்தைகளுடன்

தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், ``கடந்த சில நாள்களாக அய்யனாருக்கும் தனலட்சுமிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. கடந்த 30-ம் தேதி இரவும் வழக்கம்போல இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அய்யானர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார்.

விஷம்

அதன் பின்பு வீட்டிலிருந்த தனலட்சுமி, குழந்தைகளுக்கு விஷத்தை குடிக்க கொடுத்து தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மூவரும் மரணடைந்துள்ளனர். நள்ளிரவு வீடு திரும்பிய அய்யனார் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்.

அங்கு நுரை தள்ளியபடி இறந்து கிடந்த மனைவி, பிள்ளைளை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்பு அவரும் அங்கிருந்த விஷத்தை எடுத்து குடித்திருக்கிறார்.

கதவு உடைக்கும் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது 3 பேர் இறந்தும், அய்யனார் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததையும் பார்த்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். முதல் கட்ட விசாரணையில் தனலட்சுமி தற்கொலை செய்தது உறுதியாகியுள்ளது. வேறு ஏதும் காரணமா என்பது அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் அய்யனார் சுய நினைவுக்கு வந்தபிறகு விசாரித்தால்தான் காரணம் தெரிய வரும்" என்றனர்.

தற்கொலை

கடந்த ஆகஸ்ட்டில் இதே அலங்காநல்லூர் வட்டாரத்திலுள்ள பெரிய இலந்தைகுளத்தில் 2 பிள்ளைகளுடன் மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு முருகன் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அந்த சோகம் மறைவதற்குள் இந்த சம்பவம் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/6IZxCJ1

Post a Comment

0 Comments