தெலங்கானா ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை பாஜக-வினர் விலைக்குவாங்க முயற்சி - வீடியோ வெளியிட்ட கே.சி.ஆர்!

பாரத ராஷ்டிர சமிதி என சமீபத்தில் தேசிய கட்சியாக மாற்றம் செய்யப்பட்ட தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி செய்யும் தெலங்கனாவில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை, பா.ஜ.க விலைக்கு வாங்க பேரம் பேசியதாக அந்தக் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக, முதல்வர் சந்திரசேகர ராவ் கூட, தன் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக சதித்திட்டம் போட்டிருப்பதாகவும், எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 100 கோடி ரூபாய் என பா.ஜ.க-வினர் பேரம் பேசியிருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில், அதுதொடர்பாக புதிய வீடியோ ஆதாரத்தைச் சந்திரசேகர ராவ் நேற்று வெளியிட்டிருக்கிறார்.

சந்திரசேகர ராவ்

அந்த வீடியோவில் ராமச்சந்திர பாரதி, சிம்மயாஜி மற்றும் நந்த குமார் ஆகிய 3 பேர், இதில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சந்திரசேகர ராவ், ``இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க மற்றும் காப்பாற்ற, நீதித்துறை, தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை புல்டோசர் வைத்து இடிப்பது போல் தகர்ப்பதும் நாட்டில் வெட்கக்கேடான முறையில் நடந்து வருகிறது. ஜனநாயகம் இல்லாமல் போனால் எல்லாம் போய்விடும். தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்க்கச் சதிகள் நடந்திருக்கின்றன" என்று கூறினார்.

உச்ச நீதிமன்றம்

மேலும், ``இந்த வீடியோவை நாட்டின் அனைத்து முதல்வர்கள், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பப்படும் முன், இது விரைவில் தலைமை நீதிபதி மற்றும் நாட்டின் அனைத்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பகிரப்படும்" என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.



from Latest News https://ift.tt/07opvTf

Post a Comment

0 Comments