நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் பைக்கில் வந்த இரண்டு தீவிரவாதிகள் காவல்துறையின் வேன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தாக்குதலில் 6 காவலர்கள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தனது ட்விட்டர் பக்கதில், "பயங்கரவாதம் பாகிஸ்தானின் முதன்மையான பிரச்னைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. நமது ஆயுதப் படைகளும், காவல்துறையும் வீரத்துடன் போராடி வருகின்றன. லக்கி மார்வாட்டில் போலீஸ் வேன்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் இருக்கின்றன" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லாவும் காவல்துறைமீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறையினரிடம் அறிக்கை கேட்டிருப்பதாக மத்திய அமைச்சக அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
from Latest News https://ift.tt/CNbQpJt
0 Comments