``தடியால் அடித்து அனுப்பி வையுங்கள்!" - காதலன் குறித்து இம்ரான் கானுக்கு கோரிக்கை வைத்த இளம்பெண்

பாகிஸ்தானில் உடனடியாகத் தேர்தல் நடத்தவேண்டுமென்று கோரிக்கை வைத்து பேரணி நடத்திவரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் இம்ரான் கான் அதிர்ஷ்டவசமாகக் காலில் ஏற்பட்ட காயங்களுடன் உயிர்தப்பினார். அதோடு துப்பாக்கிச்சூடு நடந்த அடுத்த சில மணிநேரங்களிலேயே குற்றவாளியை போலீஸார் கைதுசெய்தனர்.

காலில் பாய்ந்த தோட்டா - இம்ரான் கான்

இப்படி நாடே பரபரப்பாக இருக்க, மறுபுறம் இம்ரான் கானின் பேரணியில் கலந்துகொள்வதற்காகத் திருமணத்திலிருந்து ஓடிய மணமகனை, திருப்பியனுப்புமாறு, இம்ரான் கானுக்கு மணமகள் ஒருவர் கோரிக்கை வைத்திருக்கும் நிகழ்வு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

இம்ரான் கான் பேரணி

முன்னதாக இஜாஸ் என்பவர், லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் நடத்திய பேரணியில் கலந்துகொள்வதற்காக, தன்னுடைய திருமணத்தை விட்டுவிட்டு ஓடியிருக்கிறார். பின்னர், பேரணியில் இஜாஸ் கலந்துகொண்டது மணமகள் சித்ரா நதீமுக்குத் தெரியவருகிறது. அதையடுத்து இதுபற்றி சித்ரா நதீம், சையத் பாசித் அலி எனும் யூடியூபரிடம், தான் திருமண செய்துகொள்ளவிருந்த வருங்கால கணவர் இஜாஸ் செய்ததைப்பற்றிக் கூறியிருக்கிறார்.

மணமகன் - மணமகள்

அது தொடர்பான வீடியோவில், ``என் காதலனைத் திருமணம் செய்துகொள்வதற்காக மூன்று வருடங்களாக நான் காத்திருக்கிறேன். மணமகனைத் திருப்பித் தருமாறு இம்ரான் கானிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். அவரைத் தடியால் அடித்து திருப்பி அனுப்புங்கள்" என சித்ரா நதீம் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து சித்ரா நதீமின் இந்த கோரிக்கை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.



from Latest News https://ift.tt/YMUeNXb

Post a Comment

0 Comments