``ஆளுநரின் கருத்துகளை புறந்தள்ள வேண்டும்” - துரை வைகோ காட்டம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பான `மாமனிதன் வைகோ’ ஆவணத் திரைப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தின் நலனுக்காக செயல்பட வேண்டும். ஆனால், பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ன் ஊதுகுழலாக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதன் வெளிப்பாடகவே, தமிழகத்துக்கு எதிரான கருத்துகளை பேசி வருகிறார்.

துரை வைகோ

அந்த கருத்துகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புறந்தள்ள வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை, தற்போதுள்ள கூட்டணியே தொடரும். நாட்டை சீரழிக்கிற மதவாத சக்திகளை எதிர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்.

ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழகத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் சென்றபோது, அதில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. மரியாதை நிமித்தமாகவும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தெலங்கானா மாநிலத்தில் அவரின் நடைப்பயணத்தில் கலந்துகொண்டேன்” என்றார்.



from Latest News https://ift.tt/iWX0TLF

Post a Comment

0 Comments