விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கோட்டநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி(வயது 25). இவருக்கும் குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதியர் இருவரும் குண்டலகுத்தூர் கிராமத்தில் கூட்டுக்குடும்பமாக சேர்ந்து வாழ்ந்துவந்தனர். கட்டடத் தொழிலாளியான வழிவிட்ட அய்யனார் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் பானுமதி தனது கணவர் அய்யனாருடன் செல்போனில் பேசிகொண்டிருந்தப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பானுமதி வீட்டிலுள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து, தகவலறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீஸார், பானுமதியின் உடலை மீட்டு சாத்தூர் அரசுமருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மருத்துவமனைக்கு வந்த பானுமதியின் பெற்றோர் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால் சாத்தூர் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜ் மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பானுமதியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், `மகளின் இறப்பில் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து புகார் அளியுங்கள். மேலும் கூராய்வு அறிக்கையின் முடிவின்படி தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பானுமதியின் உடலை வாங்கிச் சென்றனர்.
இந்தசம்பவம் தொடர்பாக, பானுமதியின் பெற்றோர் அப்பநாயக்கன்பட்டி போலீஸில், மருமகன் அய்யனார், அவரின் தம்பி தமிழ்ச்செல்வன் மற்றும் அவர்களின் பெற்றோர் சூரியவேல், முருகேஸ்வரி ஆகியோர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் பானுமதியின் இறப்பு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Latest News https://ift.tt/2Kajcex
0 Comments