திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குளி நடுப்பட்டி சொட்ட கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ், சுமதி தம்பதியின் மகன் பவனேஷ் (8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விளையாடச் சென்ற பவனேஷ் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து தங்கராஜ் அளித்த புகாரின்பேரில் ஊத்துக்குளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மறுநாள், புத்தூர்பள்ளபாளையம் அருகே புதரில் பவனேஷ் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஊத்துக்குளி நடுப்பட்டி சொட்டகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகன் அஜித்குமாரும்(23), ஒரு சிறுமியும் சேர்ந்து பவனேஷை கொலை செய்தது தெரியவந்தது.
அஜித்குமாரும், அச்சிறுமியும் தனிமையில் இருந்ததை பார்த்ததாலும், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அஜித்குமார் கூறியும் பவனேஷ் வெளியே கூறுவேன் என்று தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அஜித்குமாரும், சிறுமியும் சேர்ந்து பவனேஷின் வாயில் துணியை வைத்து திணித்து, பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்து, பின்னர் உடலை அருகே உள்ள புதருக்குள் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அஜித்குமார், சிறுமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.
பவனேஷை கடத்திக் கொலை செய்து, தடயத்தை மறைத்த குற்றத்துக்காக அஜித்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். சிறுமி இளம்சிறார் என்பதால் அந்த வழக்கு தனியாக நடைபெற்று வருகிறது.
from Latest News https://ift.tt/VFpSgsT
0 Comments