Doctor Vikatan: காதுகளுக்குள் தொடரும் அரிப்பு... குடைந்தால் குணமாவது ஏன்... இது சரியானதா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி காது குடையும் வழக்கம் உண்டு. காதில் அடிக்கடி அரிப்பு வருகிறது. குடைந்தால்தான் அரிப்பு சரியாகிறது. இது என்ன பிரச்னை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காதுக்குள் அரிப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அரிப்புக்கு மிகவும் பரவலான காரணம் வறட்சி. ஜலதோஷம் மற்றும் நடுக்காதில் ஏற்படும் குறை அழுத்தம் காரணமாகவும் சிலருக்கு இப்படி காதுக்குள் அரிப்பு வரலாம்.

பொதுவாகவே காது குடையும் பழக்கம் சரியானதல்ல. அப்படிக் குடைவதால் காதுக்குள் இருக்கும் சருமம் பாதிக்கப்படும். அதன் விளைவாக காதுக்குள் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்.

காதுகளைக் குடைந்து பழகிவிட்டால், மீண்டும் மீண்டும் குடைய வேண்டும் என்றோர் உணர்வு தொடரும். அது நல்ல பழக்கமே கிடையாது. சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது பஞ்சை முக்கி, பிழிந்துவிட்டு, காதுக்குள் வைத்துக்கொள்வது ஓரளவு நிவாரணம் தரும்.

நீரிழிவுநோய் பாதிப்புள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் காதுகளைக் குடையவே கூடாது. காதுகளைக் குடைவதால் ஏதேனும் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டால் நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு அதைக் குணப்படுத்துவது மிகவும் சிரமமாகலாம்.

காது

ஒருவேளை உங்களுக்கு காதுகளுக்குள் அரிப்பு தொடர்வதாக உணர்ந்தால் நீங்கள் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை (இஎன்டி) மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். அவர் அரிப்புக்கான காரணம் அறிந்து, இன்ஃபெக்ஷன் இருந்தாலும் கவனித்து அதற்கேற்ற சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/E1QtkOm

Post a Comment

0 Comments