16 வயது சிறுமி, 6 மாதமாக அனுபவித்த கொடுமை - பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா உள்ளிட்ட மூவர் கைது

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, இதே மாவட்டத்தில் இருக்கும் மற்றொரு ஊரில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 6 -ம் தேதி அருகில் உள்ள சோளக்காட்டில் அந்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த செங்குளத்தைச் சேர்ந்த பெரியசாமி (60) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை கண்ட சிறுமியின் சித்தப்பா இடும்பன் (31) பெரியசாமியை விரட்டிவிட்டு, தனது மகள் முறை என்றும் பாராமல் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவருக்கும், அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அவரும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொடர்ந்து வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

குற்றவாளிகள்

இப்படி, கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் மூன்று பேரும், அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் மூன்று பேரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மகளிர் காவல் நிலையம் போலீஸார் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் மூன்று பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கிளை சிறையில் அடைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/6UMKYVq

Post a Comment

0 Comments