மதுரை: ரயில் பாதையில் விரிசல்; மொபைலில் படம் பிடித்து விபத்தைத் தடுத்த இளைஞர்!

ரயில்பாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளதைப் பார்த்து சமயோசிதமாகச் செயல்பட்ட இளைஞரை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அழைத்து பரிசு கொடுத்துப் பாராட்டியுள்ளனர்.

ரயில்வே

மதுரை அருகே சமயநல்லூர் - கூடல் நகர் பிரிவு ரயில் பாதை அருகே வசித்து வருகிறார் சுந்தர மகாலிங்கம். இவர் மகன் சூர்யா கடந்த டிசம்பர் 15 அன்று காலை 8 மணியளவில் தனது வீட்டு அருகே செல்லும் ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டார்.

அதை என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தவர், உடனே அதை தன் செல்போனில் படமெடுத்து அங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள ரயில்வே கேட்டிற்கு வந்து அங்கு பணியாற்றும் பீட்டர் என்பவரிடம் காண்பித்துள்ளார்.

ரயில்வே அதிகாரிகளுடன் சூர்யா

உடனே அந்த ரயில்வே ஊழியர் சமயநல்லூர் ரயில் நிலைய அதிகாரியிடம் தெரிவித்ததும், நிலைய அதிகாரி அந்த நேரத்தில் மதுரை செல்ல வேண்டிய திண்டுக்கல் - மதுரை விரைவு ரயிலை உடனே நிறுத்தி விபத்தைத் தடுத்துள்ளார்.

இதற்குக் காரணமான இளைஞர் சூர்யாவின் சமயோசித செயலைப் பாராட்டும் வகையில் மதுரையில் கோட்ட ரயில்வே அலுவலகத்தில் அதிகாரிகள் அளவிலான ரயில் பாதுகாப்புக் கூட்டத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சூர்யாவைப் பாராட்டி ரொக்கப் பரிசு ரூ 5000 வழங்கினார்.

ரயில்வே

இந்த நிகழ்வில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, சூர்யாவின் தந்தை சுந்தர மகாலிங்கம், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



from Latest News https://ift.tt/ygJ4qGd

Post a Comment

0 Comments