பழநி நவபாஷாண பிரசாதத்தின் மகிமை கூறும் புலிப்பாணி ஆதினம்

தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் முக்கியமானது மூன்றாம் படை வீடான பழநி. ஸ்தலத்தாலும், தீர்த்தத்தாலும் முக்கியமான தலமாக உள்ளது. இந்தத் திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை நவபாசானத்தால் உருவாக்கிய சித்தர் போகரின் முதன்மை சீடரான புலிப்பாணியின் கருவழிப் பரம்பரையில் வந்த 13 ஆவது போகர் புலிப்பாணி ஆதினத்தைச் சந்தித்து பேசினோம்.  

பழநி

பழநி மலையில் 90 சதவிகிதம் செவ்வாய் நிழல் பழநியில் விழுகிறது. செவ்வாய் அதிபதி முருகன். அவருடைய பழநி செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த இடமாகப் பழநி உள்ளது. குன்றில் ஞான தண்டாயுதபாணியை நிறுவும்போது கல்லாகவோ, உலோகமாகவோ, மரமாகவோ வைக்கவில்லை. மனக்குறை, உடல்குறைகளைப் போக்கக்கூடியதாக அமைய வேண்டும் என 18 சித்தர்களால் ஆலோசிக்கப்பட்டு போகரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் 18 சித்தர்களில் மிகவும் சிறப்பு பெற்றவர் போகர். அவருடைய முதன்மைஸ் சீடராக புலிப்பாணி இருந்தார்.

பழநி மலைக்கோயிலின் தென்மேற்குப் பகுதியில் போகர் ஜீவசமாதி உள்ளது. அவர் வழிபட்ட மரகத லிங்கம் புவனேஸ்வரி சக்கரங்கள் இன்றும் மக்களின் தரிசனத்திற்காக உள்ளன. அங்கிருந்து மூலவர் கோயில்வரை சுரங்க வழி உள்ளது. உடலில் உள்ள 9 நவதுவாரங்கள் இருப்பதால்தான் போகர் 9 பாஷாணங்கள் எடுக்கக் காரணம். மனிதனுக்கு கிரகங்களால் மனநோய் ஏற்படுகிறது. எனவே கிரகதோசத்தை போக்கக்கூடியவராகவும், உடல்நோய் போக்கக் கூடியவாரகவும் ஞான தண்டாயுதபாணி உள்ளார். 

பழநி முருகன் - போகர்

மொத்தம் உள்ள 64 பாஷாணங்களில் இருந்து எடுக்கப்பட்ட 9 பாஷாணங்கள் உடம்பில் ஏற்படக் கூடிய நோய்களைப் போக்கக்கூடிய சக்தியாக இருக்கின்றன. மனித உடலில் ஏற்படக்கூடிய 4 ஆயிரத்து 448 நோய்களைத் தீர்க்கக்கூடியது. அதில் இருந்து பெறக்கூடிய பிரசாதங்கள் சிரசு விபூதி, ராக்கால சந்தனம், கெளபீன தீர்த்தம் இவற்றைப் பிரசாதமாக உட்கொள்ளும்போது அவை மருந்தாகின்றன என்பது நம்பிக்கை.

போகரால் தண்டாயுதபாணி சுவாமியின் உடல் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் சிரசு விபூதி வைக்கப்படும், மார்பு குழியில் இரவில் வைக்கக்கூடிய சந்தனம் வைக்கப்படும், அடிப்பகுதியில் இருந்து முருகன் உருபொருள் இல்லை கருப்பொருளாக இருப்பதால் முத்து முத்தாக வியர்க்கும். அந்தத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விபூதி, சந்தனம், தீர்த்தம் மனித உடலில் சென்றால் எவ்வித நோய் ஏற்படாது என்கிறார்கள் சித்தர்கள். 

பழநி - போகர்

தனித்திருந்து வாழக்கூடிய தண்டாயுதபாணி சுவாமி சகலமும் அளிக்கக் கொடுக்கக் கூடிய  சக்தி வாய்ந்தவர். 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மலைக்கோயிலில் உள்ள அவர் எல்லோருக்கும் ஞானத்தை கொடுக்கக்கூடியவராக உள்ளார் என்றார். 



from Latest News https://ift.tt/jvhEqP9

Post a Comment

0 Comments