உலகம முழுவதுமுள்ள விமான நிலையங்களில் விமானப் பணிகளுக்கான அறிவிப்பு அமைப்பில் NOTAM எனும் கட்டுப்பாட்டு அறை இருக்கும். இந்த அறையிலிருந்து அந்தப் பகுதிக்குள் வரும் விமானத்துக்கான ஆணைகள், சிக்னல் தொடர்பான தகவல்கள் வழங்கப்படும். அமெரிக்காவில் இருக்கும் இந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அமெரிக்காவின் அனைத்து விமானங்களும் அந்தந்தப் பகுதியில் இருக்கும் விமான நிலையங்களில் தரையிறங்க உத்தரவிடப்பட்டது.
கட்டுப்பாட்டு அறையின் இந்த உத்தரவால் 5000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று மாலை 5 மணி வரை குறைந்தபட்சம் 9,207 விமானங்கள் அமெரிக்காவிற்குள் வரவிருந்த அல்லது அங்கிருந்து புறப்பட இருந்த விமானங்கள் தாமதமாகியுள்ளன. மேலும் 1,309 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான கண்காணிப்பு தளமான FlightAware தெரிவித்துள்ளது.
இந்த குழப்பத்தால் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், அதன் திட்டமிடல் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அடுத்த எட்டு நாட்களின் 1500-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்திருக்கிறது. விமான சேவைகளில் ஏற்பட்ட இந்த திடீர் குழப்பத்தால் அமெரிக்க விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யா - அமெரிக்காவுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துவருவதால், இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என தகவல் வெளியானது. இதற்கு முன்னர், ரஷ்யாவில் இருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு, கடலுக்கு அடியில் ராட்சத குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ராட்சதக் குழாய் மர்மமான முறையில் தகர்க்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
எனவே, இதற்கு எதிராக ரஷ்யா நிகழ்த்திய சைபர் தாக்குதலாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டது. ஆனால், வெள்ளை மாளிகை, உடனடியாக இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,"இது சைபர் தாக்குதல் என இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ஆய்வாளர்கள் இந்த சிக்கல் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்" என விளக்கமளித்திருக்கிறார். விமான சேவை தொடர்பாக எப்போதும் பதிலளிக்காத வெள்ளை மாளிகை முதன்முதலாக தானே விளக்கமளித்திருப்பது கவனிக்கப்படவேண்டியது.
போக்குவரத்துச் செயலர் பீட் புட்டிகீக், "இந்த சிக்கலுக்கான மூலக் காரணங்களைத் கண்டுபிடிப்பதற்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் FAA முயன்று வருகிறது. மேலும், இது இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமான சேவைகளிலும் பாதிப்பு இல்லை. அமெரிக்கா விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்" என்று தெரிவித்திருக்கிறார்.
from Latest News https://ift.tt/dqDEQlJ
0 Comments