தென்காசி: முன்விரோதத்தில் நடந்த இரட்டை கொலை - குடிபோதையில் உறவினர்களுக்குள் நடந்த விபரீதம்!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் தேவ விநாயகர்கோயில் தெருவில் வசிப்பவர் ஐயப்பன். அவரின் வீட்டின் அருகே அவரின் உறவினரான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே குடும்ப சொத்து தொடர்பான நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் அடிக்கடி சண்டை நடந்து வந்திருக்கிறது.

கொலை செய்யப்பட்டவர்கள்

இந்த நிலையில், நேற்று இருவரும் குடித்திருந்த நிலையில், நிலப்பிரச்னை தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருவரும் இருந்ததால், ஆத்திரமடைந்த செல்லதுரை, தன்னிடம் இருந்த அரிவாளால் ஐயப்பனை வெட்டியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ஐயப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த நேரத்தில் ஐயப்பனின் மகன் கருப்பசாமி என்பவர் அங்கு வந்துள்ளார். தனது தந்தை உயிரிழந்தைப் பார்த்து பதறிய அவர் அங்கு உடலில் ரத்தம் தெறித்த நிலையில் இருந்த செல்லதுரை மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

ஐயப்பன் கொலைக்குப் பழி தீர்க்கும் வகையில் அவரின் மகன் கருப்பசாமி, தன் எதிரே நின்ற செல்லதுரையின் கையில் இருந்த அரிவாளைப் பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மது போதையில் உறவினர்களுக்கு இடையே நடந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்கள்

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உயிரிழ்ந்த இருவரின் உடல்களை மீட்ட போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லத்துரையை கத்தியால் குத்தி கொலை செய்த கருப்பசாமியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/GBJvxea

Post a Comment

0 Comments