தேனி: போதை ஊசி பயன்பாடு குறித்த ரகசிய தகவல்; சுடுகாட்டில் வைத்து இளைஞர்களைக் கைதுசெய்த போலீஸ்!

​தேனி மாவட்டம், போடி சிலமலை அருகேயுள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்று கூடி போதை வஸ்துக்களைப் பயன்படுத்தி வருவதாக ​புகார் எழுந்தது. ​​இதைத் தொடர்ந்து நேற்று மாலை ஆறு மணியளவில் ​​போடி தாலுகா காவல்​ ​​சார்பு ஆய்வாளர் இத்தீஸ்கான் தலைமையில் ​போலீஸார், சுடுகாட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுடுகாட்டிலிருந்து ​6 இளைஞர்கள் காவலர்களைக் கண்டு தப்பி ஓடினர். ​அதில் ​தப்பி ஓடிய ​3 இளைஞர்களை தாலுகா ​போலீஸார் கைதுசெய்தனர்.

சுஜித்

அவர்களிடம் ​போலீஸார் நடத்திய விசாரணையில், போதை ஊசி பயன்படுத்தியவர்கள் போடி சிலமலையைச் சேர்ந்த சுஜித் குமார், திவின் குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்பது தெரியவந்தது.​ ​

திவீன்குமார்

மேலும் தப்பி ஓடிய மூன்று இளைஞர்கள் ராசிங்காபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிலமலையைச் சேர்ந்த பிரவீன், பரத் குமார் என்பதும் தெரிய​வந்தது.​ ​இதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட மூன்று பேரிடமிருந்து 3 ஊசிகள்​,​ ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்தையும் கைப்பற்றினர்.

​இந்த மருந்தானது கர்ப்பிணிகள், இதய நோய் உள்ளவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் பயன்படுத்தக்கூடிய மருந்து.​ ​இந்த மருந்தினை தற்போது இளைஞர்கள் போதை ஊசியாக பயன்படுத்தி வருகின்றனர்.​ ​போடி தாலுகா காவல்துறையினர் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து மருந்து எங்கே வாங்கப்பட்டது... மேலும் யாரெல்லாம் இந்த போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கின்றனர் என்பதைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்ச்செல்வன்

​ஏ​ற்கெனவே திருச்சியிலிருந்து பேருந்து பார்சல் சர்வீஸ் மூலம்​ வாங்கப்பட்ட மருந்துகளை, போதை ஊசிகளாக வியாபாரம் செய்தும், பயன்படுத்தியும் வந்த தேனியைச் சேர்ந்த 18 இளைஞர்களை தனிப்படை போலீஸார் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது. 



from Latest News https://ift.tt/uGgSijb

Post a Comment

0 Comments