​திண்டுக்கல்​: விடுதி மாடியிலிருந்து கீழே குதித்த நர்சிங் மாணவி ​உயிரிழப்பு - என்ன நடந்தது?

​திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கேதையுறும்பு பழையபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன்​.​ இவர் மகள், திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலை அருகே தனி​யார் ​​​கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வந்தார்​.​ 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை

​இந்த நிலையில், மாணவி கடந்த 21-ம் தேதி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக, ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் ​அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ​மாணவி அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்​.​ இதை​யடுத்து ​மாணவியின் உடலை திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பிவைத்தனர். மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து தனியார் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்​.​ மேலும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்​.

சாலைமறியல்

அப்போது அவர்கள், ``மாணவி இறப்பு குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும். உடன் தங்கியிருந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரிக்க வேண்டும்" என வலியுறுத்தினர். 



from Latest News https://ift.tt/3NpwtKr

Post a Comment

0 Comments