"சிறையிலிருந்து சீக்கிரம் திரும்ப பிரார்த்திக்கிறேன்" - சிசோடியா கைதாவதற்கு முன்பே கெஜ்ரிவால் ட்வீட்

டெல்லி மதுக் கொள்கை வழக்கு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று விசாரணை நடத்தவிருக்கிறது. முன்னதாக பிப்ரவரி 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிபிஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது, டெல்லியின் நிதி அமைச்சராக நிதிநிலை அறிக்கை தயாரித்து வருவதால், விசாரணைக்கு ஆஜராக ஒரு வாரம் அவகாசம் கேட்டிருந்தார் மணீஷ் சிசோடியா. அதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ, அவரிடம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.

இந்த நிலையில், மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், ``குழந்தைகள் உட்பட நாட்டு மக்களின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது. சில மாதங்கள் சிறைக்குச் சென்றாலும் கவலைப்பட வேண்டாம். பகத்சிங் நாட்டுக்காகத் தூக்கிலிடப்படுவதைத் தேர்ந்தெடுத்தார். பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக நான் சிறைக்குச் சென்றால் அது மிகச் சிறிய விஷயம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

மணீஷ் சிசோடியா - ஆம் ஆத்மி

அதே போல டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கடவுள் உங்களுடன் (மணீஷ்) இருக்கிறார். நாட்டுக்காகவும், சமுதாயத்துக்காகவும் சிறைக்குச் செல்லும்போது, அது சாபமல்ல, பெருமைக்குரிய விஷயம். நீங்கள் சிறையிலிருந்து சீக்கிரமாகத் திரும்ப வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from Tamilnadu News https://ift.tt/yzJ7ECj

Post a Comment

0 Comments