உறவினர்களுடன் பயணிக்க முழு விமானத்தை புக் செய்த மணமக்கள்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திருமணம் என்பது கொண்டாட்டமாக மாறியதிலிருந்து ஒவ்வொருவரும் அவர்களின் சக்திக்கேற்றவாறு அதை நினைவுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையில் புவன் - சரோகி இருவரும் தங்கள் திருமணத்துக்கு, விமானம் மூலம் நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு உறவினர்களை அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது.

இது தொடர்பாக `theshubhwedding' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், மணமகன் கேமரா முன்னாள் சில விளையாட்டுத்தனமான சைகைகளை செய்கிறார். உறவினர்கள் அனைவரும் கைகளை இணைத்து இதயம் போன்ற வடிவத்தைக் காண்பிக்கிறார்கள். சிலர், தங்கள் மகிழ்ச்சியைக் கூச்சலிட்டு வெளிப்படுத்துகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவுக்கு கீழே பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

`திருமணத்துக்காக முழு விமானத்தையும் புத்திசாலித்தனமாக முன்பதிவு செய்தவர்களுக்கு வாழ்த்துகள்', `இதுக்குப் பேர்தான், கல்யாணத்துக்கு குடும்பமா போறதோ' எனவும் இணையவாசிகள் வீடியோவுக்கு கமென்ட் செய்துவருகின்றனர். தற்போது இந்த வீடியோ 17 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலாகிவருகிறது.

இதற்கு முன்னர் ராஜஸ்தானைச் சேர்ந்த மணமக்கள் திருமணத்துக்காக குடும்பத்துடன் விமானத்தில் சென்ற வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/r7CZSGp

Post a Comment

0 Comments