அன்புஜோதி ஆசிரம விவகாரம்: அரசு மருத்துவமனை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சிபிசிஐடி விசாரணை!

விழுப்புரம் மாவட்ட அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அதன்படி கடந்த 20-ம் தேதி சி.பி.சி.ஐ.டி டீம் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்திருந்தது. அன்புஜோதி ஆசிரமம் வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் அன்றைய தினம் விழுப்புரம் எஸ்.பி முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அன்புஜோதி ஆசிரமம்

அதன் தொடர்ச்சியாக 21-ம் தேதி சி.பி.சி.ஐ.டி எஸ்.பி அருண் பாலகோபாலன் தலைமையிலான குழுவினர் மற்றும் தடவியல்துறை துணை இயக்குநர் சண்முகம் உள்ளிட்டோர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஒரே சமயத்தில் ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்கள் மற்றும் தடையங்களை சேகரித்தனர். ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிலர் வீடுகளுக்கும் மற்ற காப்பகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்னும் சிலர் அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, நேற்றைய தினம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சிவகுமார் தலைமையிலான குழுவினர், மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ., ஏ.ஆர்.எம்.ஓ., மனநல மருத்துவர் உள்ளிட்டோர்களிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், அன்புஜோதி ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்குவதாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் போலீஸிடம் புகார் அளித்திருந்த நிலையில், நேற்று அவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். விழுப்புரம் வண்டிமேடு அருகே உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு நேற்று காலை சில ஆவணங்களுடன் சென்ற மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமும் இரண்டு மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தடவியல்துறை - சி.பி.சி.ஐ.டி ஆய்வு

இதுமட்டுமின்றி, ஆசிரமத்தில் ரேஷன் அரிசி பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆசிரமத்தில் ரேஷன் அரிசி குறித்து ஆய்வு நடத்தினர். சர்ச்சைக்கு உள்ளான இந்த ஆசிரம் குறித்தாக பகீர் பின்னணி தகவல்கள், நேற்றைய தினம் வெளியான 26.02.2023 தேதியிட்ட ஜூனியர் விகடன் புத்தகத்தில்..! லிங்க் கீழே.



from Latest News https://ift.tt/a4iBlZR

Post a Comment

0 Comments