புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரமேஷ் (48). கடந்த வாரம், இவர் கல்விச் சுற்றுலா கூட்டிச் செல்வதாகக் கூறி, பள்ளி நிர்வாகத்துக்குத் தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள், 2 மாணவர்கள் என 5 மாணவர்களை கொடைக்கானலுக்குத் தன்னுடைய காரில் ரகசியமாக சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஒருநாள் இரவு தங்கியதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் சுற்றுலா சென்ற விவகாரம், சுற்றுலா சென்ற மாணவர் ஒருவரின் மூலமாக வெளியில் கசிந்தது. இதுப் பற்றி தகவலறிந்த பெற்றோர்கள் கொதிப்படைந்தனர். பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் புகாரின் பேரில், கல்வித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, சமூகபாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஆசிரியர் ரமேஷ் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியாமல் மாணவிகளை, அழைத்துச் சென்றது, அவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுத்ததும் தெரியவந்திருக்கிறது.
மேலும், சுற்றுலா கூட்டிச் சென்ற விவகாரத்தை வெளியில் சொன்னால், செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களை குறைத்துவிடுவதாகவும் மாணவர்களை மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில் தான், கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா இது குறித்த புகாரை மனுவாக கொடுத்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், உதவி தலைமையாசிரியர் ரமேஷை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர், மாணவிகளை ரகசியமாக சுற்றுலா கூட்டிச் சென்ற விவகாரம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அன்னவாசலைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், `` இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களாய் வேலை செய்கிறார். ஆசிரியரின் இது போன்ற நடவடிக்கை எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. இப்போது, விசாரிக்கும் போது தான், ஏற்கெனவே வேலை செய்த இடத்திலும் இதுபோன்ற ஒரு பிரச்னையில் தான் மாற்றுதலாகியிருக்கிறார்.
மேலும், சில மாணவிகளை பக்கத்து ஊர்களுக்கு அவ்வப்போது அழைத்துச் சென்றிருப்பதும் எங்களுக்கு தெரியவருகிறது. இன்று கொடைக்கானல் வரையிலும் கூட்டிப் போய் ரூம் போட்டிருக்கிறார். பாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இது போன்ற வேலையில் ஈடுபட்டால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் பெற்றோர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறது. சம்மந்தப்பட்ட ஆசிரியரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதோடு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
from Latest News https://ift.tt/iqgSpfs
0 Comments