"எங்கள் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக நிற்போம்" - ஐடி ரெய்டு குறித்து பிபிசி!

குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்குத் தொடர்பு இருப்பதாக பிபிசி வெளியிட்ட "India: The Modi Question" என்ற ஆவணப்படம் குறித்த சர்ச்சைகள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தின. பிபிசி ஆவணப்படம் குறித்த சர்ச்சை அடங்குவதற்குள், டெல்லி, மும்பையிலுள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

பிபிசி ஆவணப்படம்

மூன்று நாள்களாகத் தொடர்ந்துவந்த சோதனையில், பிபிசி-யின் மூத்த அதிகாரிகளின் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் ஏதேனும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதைத் தொடர்ந்து, பிபிசி-யின் செய்திக் குழு,"வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி, மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களை சோதனை செய்து விட்டு, வெளியேறியிருக்கின்றனர்.

நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம். எங்களில் சிலர் நீண்ட நேரம் கேள்விகளை எதிர்கொண்டிருக்கின்றனர். எங்கள் நிறுவனம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது. மேலும் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள எங்களது வாசகர்களுக்கு தொடர்ந்து செய்திகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பிபிசி

பிபிசி ஒரு நம்பகமான, சுதந்திரமான ஊடக அமைப்பு. எந்தவித அச்சமோ, சார்பு தன்மையோ இன்றி செயல்படும் பத்திரிகையாளர்களுக்கும், சக ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்போம்" என்று தெரிவித்திருக்கிறது.



from Latest News https://ift.tt/dyMSFuh

Post a Comment

0 Comments