அமெரிக்காவின் நியூயார்க்
அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட பட்டியலில் நியூயார்க் முலிடத்தில் உள்ளது. அங்கு 3,45,600 மில்லியனர் உள்ளனர். அவர்களின் நிகர மதிப்பு 100 மில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது. இது மட்டுமல்லாமல் அங்கு 59 பில்லியனர்களும் உள்ளனர்.
ஜப்பானின் டோக்கியோ
இரண்டாவது இடத்தில் இருப்பது டோக்கியோ. இங்கு 3,04,900 மில்லியனர்களும். 12 பில்லியனர்களும் உள்ளனர்.
அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ
2,76,400 மில்லியனர்களுடன் சான்ஃபிரான்சிஸ்கோ மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு 62 பேர்பில்லியனர்கள்.
லண்டன்
நான்காவது இடத்தில் உள்ள லண்டனில் 2,72,400 மில்லியனர்கள் உள்ளனர். இங்கு 9,210 மல்டிமில்லியனர்கள் மற்றும் 38 பில்லியனர்கள் உள்ளனர்.
சிங்கப்பூர்
ஐந்தாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இங்கு 2,49,800 மில்லியனர்கள், 8,040 மல்டி மில்லியனர்கள் மற்றும் 26 பில்லியனர்கள் உள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் & மாலிபுவில் 1,92,400 மில்லியனர்கள், 8,590 மல்டி மில்லியனர்கள் மற்றும் 34 பில்லியனர்கள் உள்ளனர்.
சிகாகோ
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் சிகாகோவும் ஒன்று. அதிக மில்லியனர்கள் வசிக்கும்நகரங்களின் பட்டியலில் இது ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு 1,60,100 மில்லியனர்கள், 7,400 மல்டி மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்கள் உள்ளனர்.
ஹூஸ்டன்
8வது இடத்தில் உள்ள ஹூஸ்டனில் 1,32, 600 மில்லியனர்கள், 6,590 மல்டி மில்லியனர்கள் மற்றும் 25 பில்லியனர்கள் உள்ளனர்.
பெய்ஜிங்
சீனாவின் தலைநகரான பெய்ஜிங், உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட ஒன்பதாவதுநகரம். இங்கு 1,31,500 மில்லியனர்கள், 6,270 மல்டி மில்லியனர்கள் மற்றும் 44 பில்லியனர்கள்உள்ளனர்.
ஷாங்காய்
ஷாங்காய் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களைக் கொண்ட பத்தாவது நகரமாகும். இங்கு1,30,100 மில்லியனர்கள், 6,180 மல்டி மில்லியனர்கள் மற்றும் 42 பில்லியனர்கள் உள்ளனர்.
from Latest news https://ift.tt/Wdh3RFp
0 Comments