வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான அறிக்கை; அண்ணாமலைமீது வழக்கு பதிவுசெய்த போலீஸ்!

கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில், தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின. இதை திட்டமிட்டு பா.ஜ.க-வினர் பரப்பி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், "யார் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் சூழலில் ஈடுபட்டாலும், அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்" என எச்சரித்திருந்தார்.

தமிழ்நாடு காவல்துறையும், `வதந்தி பரப்புபோர்மீது, 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் வகையான வழக்குகள் பதியப்படும்' என எச்சரித்திருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ``தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம். தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின்

இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டிருப்பதாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைமீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், மதரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அண்ணாமலைமீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.



from Tamilnadu News https://ift.tt/X21CKhH

Post a Comment

0 Comments