சென்னை: `அரசுப் பேருந்துகளைத் தனியார் இயக்குவது சாத்தியமா?' - கருத்துக்கேட்க குழு அமைக்கும் MTC

சென்னை மாநகரில் 625 வழித்தடங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயங்கிவருகின்றன. தினசரி சுமார் 30 லட்சம் பேர் வரை இந்தப் பேருந்துகளில் பயணம் செய்துவருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் தனியார், அரசுப் பேருந்துகளை `Gross Cost Contract' என்ற முறையின் அடிப்படையில் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுசெய்ய ஆய்வுக்குழுவையும் அமைத்திருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025-ம் ஆண்டுக்குள் 500 பேருந்துகளையும் இயக்கவும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஆலோசனை வழங்க ஆலோசகர் குழுவுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பதாக, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இது உலக வங்கியின் நிதி உதவியின்கீழ் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்கள் தங்களின் பேருந்துகளை சென்னைக்குள் இயக்க அனுமதி அளிக்கப்படும். அதற்கு கி.மீ விகிதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தனியார் நிறுவனங்கள் வழங்கும்.

அரசு போக்குவரத்து கழகம்

நிர்ணயம் செய்யப்பட்ட தொகையைவிட அதிகமாக வரும்போது, அதை மாநகர போக்குவரத்துக் கழகம் எடுத்துக்கொள்ளும். குறைவான தொகை வந்தால் கூடுதல் தொகையை மாநகரப் போக்குவரத்து கழகம் தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும் எனவும் விளக்கமளித்திருக்கிறது.



from Tamilnadu News https://ift.tt/5dp1VRG

Post a Comment

0 Comments