ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரிக்க விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் 'கிழக்கு வாசல்'.
மறைந்த நடிகர் விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் கதை என்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு இந்த சீரியலின் ஷூட்டிங்கின் தொடக்க விழாவும் நடந்தது.
`சம்சாரம் அது மின்சாரம்' விசு கேரக்டருக்கு இந்த சீரியலில் இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கமிட் செய்யப்பட்டிருக்கிறார்.
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவும் இந்த சீரியலில் நடிக்க கமிட்டாகி இருந்ததால் அவரும் பூஜையில் கலந்து கொண்டார். இவருக்கு ஜோடியாக ந 'பூவே பூச்சூடவா' ரேஷ்மா கமிட் ஆகியிருந்தார்.
இதனிடையே சீரியலின் ஒளிபரப்பு தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில், சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெளியேறினார். ரேஷ்மாவுடன் சஞ்சீவின் ஜோடிப் பொருத்தம் போதுமானதாக இல்லை என்பதே காரணம் எனச் சொல்லப்பட்டது.
சஞ்சீவிடமே இது குறித்துக் கேட்ட போது,
''பூஜையில் கலந்துகிட்டதும் உண்மைதான். ஷூட்டிங் தொடங்கி நடிக்கவும் செஞ்சேன். ஆனா இப்ப நான் அந்த புராஜெக்டில் இல்லை. 'நீங்க இந்த சீரியலில் பண்ணலை'னு எங்கிட்டச் சொல்லிட்டாங்க. ஆனா காரணங்கள் என்னன்னு நீங்க கேட்டா, அதை நான் மீடியா முன்னாடி விளக்கமாப் பேச விரும்பலை. அதனால நடந்ததை மறந்துட்டு அடுத்து என்னன்னு பார்க்கணும். சீக்கிரமே அடுத்த புராஜெக்ட் இருக்கும்" என முடித்துக் கொண்டார் சஞ்சீவ்.
தற்போது சஞ்சீவுக்குப் பதிலாக அந்தக் கேரக்டரில் நடிக்க 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்து வரும் நடிகர் வெங்கட்டை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கிற சூழலில் அதில் முக்கியக் கேரக்டரில் நடித்து வருகிற வெங்கட்டை புதிய சீரியலின் ஹீரோவாகக் கமிட் செய்திருப்பது குறித்து சேனலுக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசிய போது,
''பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கிட்டத்தட்ட நிறைவுப் பகுதிக்கு வந்திடுச்சு. அநேகமா ஜுன் மாதத்துடன் தொடர் முடிஞ்சிடும்னு சொல்றாங்க. அந்த தொடர் முடிவடையறதுக்கும் ராடானின் புது சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்குவதற்கும் சரியா இருக்கும்'' என்கிறார்கள்.
நேற்று நடந்த விஜய் டெலி அவார்ட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை `பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடருக்காக வெங்கட் வாங்கியிருக்கிறார் என்பதும் கூடுதலான ஒரு தகவல்
from Latest news https://ift.tt/2KXWLTe
0 Comments