வெளிநாட்டு முதலீட்டுப் பயணத்தைத் தொடங்கும் முன்பு மெரினா கடற்கரையில் 'அண்ணா' மற்றும் 'கலைஞர்' நினைவிடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். பின்பு, தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கௌதம் சிகாமணி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின் , அவருடன் அமைச்சர்கள், நிர்வாகிகள் பட்டாளமே விமான நிலையத்துக்குப் பறந்தது. குறிப்பாக, தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு மஸ்தான், சி.வி.கணேசன், பொன்முடி, மனோ தங்கராஜ், நேரு, காந்தி, த.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, அ.ராசா எனப் பெரும் படையே முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.
விமான நிலையத்தில் பயணத்தைக் குறித்து சிறு விளக்கத்தைத் தந்தார் முதல்வர் ஸ்டாலின். பின், பத்திரிக்கையாளர்களுக்கு கேள்விகளுக்குப் பதில் தெரிவித்து சிங்கப்பூர் சென்றார்.
முதலமைச்சர் முதலீட்டு பயணம்!
சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ’உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ கலந்து கொள்ளும்படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஒன்பது நாள் அரசு முறைப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 6,100 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 15,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளும், 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது சிங்கப்பூருக்கு மற்றும் ஜப்பானுக்குப் பயணத்தைத் மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மை செயலாளர் உமா நாத், அனு ஜார்ஜ், அரசு கூடுதல் செயலாளர் கிருஷ்ணன், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை ஆணையர் மோகன் என பல அதிகாரிகள் முதலமைச்சருடன் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஹைலைட்ஸ்:
2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ’1 டிரில்லியன்’ முதலீட்டை ஈர்ப்பதில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகயிருக்கும். இதன்படி, 23 லட்சம் கோடி ரூபாயை ஈர்த்திடவும் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டல் அண்டு இன்வஸ்மன்ட் (Capital and Investment) அலுவலர்களைச் சந்திக்கயிருக்கிறார். அன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டிஎன் டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து சிங்கப்பூர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
உலக அளவில் முன்னணி குளிர்சாதன இயந்திர தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷியுடன் ’1891 கோடி’ ரூபாய்க்கும், நிசான் போன்ற முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஒசாகாவில், ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோ (JETRO) நிறுவனத்துடன் இணைந்து அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த முறை நான் மேற்கொண்ட துபாய் பயணத்தின்போது 6,100 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அதில் ’ஷெராப் குழும’ நிறுவன முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. ’லூலூ பன்னாட்டு குழுமம்’ கோயம்புத்தூரில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டது. சென்னையில், தன் திட்டத்திற்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. நிலம் கிடைத்தவுடன் கட்டுமான பணிகளை துவக்கிட தயாராக இருக்கிறது.
ஒசாகா செல்லும் முதல் தமிழ்நாடு குழு!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஒசாகாவில் அதிகம் வசித்து வருகின்றனர். அந்த நகருக்கும் வருகை தரும்படி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஒசாகா நகருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சருடனான குழு செல்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஒசாகாவுக்கு செல்வது இதுவே முதல்முறை.
மேலும், 200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்கள். ’கியோகுடோ’ மற்றும் ’ஓம்ரான்’ நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட உள்ளன.
இவை மொத்தமாக தமிழகத்துக்குப் பெரும் முதலீட்டை ஈர்க்கும் என்ற அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.
from Latest news https://ift.tt/kOzawHZ
0 Comments