சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின், இன்று பயணம்!
இரண்டாடுகளுக்கு முன்னர், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்தது. இதன் ஒரு பகுதியாக தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், 9 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இன்று சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு அந்நாட்டு அமைச்சர்களை சந்திக்கிறார். மேலும் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார். மேலும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஜப்பான் நாட்டில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகளையும் சந்தித்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்று, சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர்அதிகாரிகளும் செல்கின்றனர்.
from Latest news https://ift.tt/vVrh0uX
0 Comments