தனியார் ஊழியர்களின் விடுமுறை சம்பளம்: வரி விலக்கு உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு..!

தனியார் துறை ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது தாங்கள் சேமித்து வைத்த விடுமுறை நாள்களை பணமாகப் பெறும் வசதி உள்ளது. இப்படி  பெறும் தொகையில் ரூ.3 லட்சம் வரை வருமான வரி விளக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்த உச்சவரம்பு 2002-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இதை 25 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய பட்ஜெட் 2023-24 -ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

மத்திய அரசு

இந்த நிலையில் இதை செயல்படுத்த வரி விலக்கு உச்சவரம்பை  25 லட்சம் ரூபாயாக உயர்த்தி  மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சலுகை 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தனியார் துறை ஊழியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து பெறும் விடுமுறை சம்பளத்துக்கு அவர்களின் பணிக் காலத்தில் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும் அதற்கு மேற்படும் தொகைக்கு அந்தப் பணியாளர் எந்த அடிப்படை வருமான வரி  வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப  வரி கட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.



from Latest news https://ift.tt/evcKaBk

Post a Comment

0 Comments