மூளை ஆரோக்கியம்; பின்பற்ற வேண்டிய பழக்கங்களும் உணவுமுறைகளும்!

தூக்கமின்மை, உணவு முறை போன்றவற்றால் மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எளிய பயிற்சிகள், உணவு முறைகள் மூலம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடலின் தலைமைச் செயலகமாக இருப்பது மூளை. உறுப்புகள் அனைத்தையும் இயக்கக்கூடிய மூளையின் ஆரோக்கியம் மிக முக்கியம். ஏனெனில், உடல் என்ற வாகனத்தைத் திறம்பட இயக்கும் டிரைவர் மூளைதான். மூளையின் ஆரோக்கியத்துக்குச் சில உணவு முறைகளும் பழக்கங்களும் அவசியம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்...

பச்சைக் காய்கறிகள்

உணவுகள்

மூளையின் ஆரோக்கியத்துக்கும் செயல்பாட்டுக்கும் ஒமேகா - 3 ஃபேட்டி அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் பி - 12, வைட்டமின் - சி மற்றும் டி சத்துகள் அவசியம். மீன், முட்டை, பச்சை நிறக் காய்கறிகள், பூண்டு, கேரட், வல்லாரைக் கீரை, வால்நட், பாதாம் போன்றவற்றை உணவில் சேர்த்துவந்தால் ஞாபகமறதி நீங்கும்.

மனஅழுத்தம் குறைத்தல்

மனஅழுத்தத்தின்போது, சுரக்கும் கார்ட்டிசால் (cortisol) என்ற ஹார்மோன் மூளையைப் பாதிக்கிறது. இதனால் ஞாபகசக்தி குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனஅழுத்தம் குறைக்கும் விஷயங்களில் நேரத்தைச் செலவழிப்பது நல்லது.

மூளையைக் கூர்மையாக்கும் பயிற்சிகள்

சுடோகு, குறுக்கெழுத்து போன்றவை நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவை மூளையைக் கூர்மையாக்கும்.

செஸ்

உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சி உடலை மட்டுமின்றி மூளையின் செயல் திறனையும் அதிகரிக்கக் கூடியது. பார்க்கின்சன் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்க, உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது.

போதுமான தூக்கம்

தூக்கம், மூளையின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம், மூளையின் கற்றல் திறனையும் அதிகரிக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

- ஜி.லட்சுமணன்



from Latest news https://ift.tt/M4LWUXx

Post a Comment

0 Comments