கரள: கஙகரஸ மநல தலவர கத... 2 நள கறபபதனம என அறவதத தலவரகள!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். போலியான பழங்கால் பொருள்களை வைத்துக்கொண்டு பல மோசடி செய்துள்ளதாக கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் உள்ளார். வட்டி இல்லாமல் நூறு கோடி ரூபாய் லோன் வாங்கித்தருவதாக 6.27 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சேர்த்தலாவைச் சேர்ந்த ஷாஜி என்பவர் அளித்த புகாரில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

மோன்சன் மாவுங்கல்

மோன்சன் மாவுங்கல் தன்னிடம் 2018-ம் ஆண்டு மோசடியாக 25 லட்சம் ரூபாய் பெற்றதாகவும். அதில், 10 லட்சம் ரூபாயை கேரள மாநில தலைவர் கே.சுதாகரன் வாங்கிச்சென்றதாகவும் அனூப் என்பவர் க்ரைம் பிரான்ச் போலீஸில் புகாரளித்தார். அந்த வழக்கில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.சுதாகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக கொச்சி களமசேரி க்ரைம் பிரான்ச் அலுவலகத்தில் வைத்து கே.சுதாகரனிடம் போலீஸார் நேற்று காலை 11 மணி முதல் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடந்த விசாரணை நேற்று இரவு 7 மணியளவில் விசாரணை முடிவுக்கு வந்தது . விசாரணை முடிந்தபிறகு க்ரைம் பிரான்ச் போலீஸார் அவரை கைது செய்தனர்.

ஏற்கனவே நீதிமன்ற அறிவுறுத்தல் உள்ளதால் கைது செய்யப்பட்ட பின்னர் கே.சுதாகரன், இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சனி, ஞாயிறு (இன்றும், நாளையும்) 2 தினங்கள் கறுப்பு தினமாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மாநில தலைவர் கே.சுதாகரன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சுதாகரன்

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கே.சுதாகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த வழக்கு தகுதியானதா, தகுதியற்றதா என நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இந்த வழக்கில் என்னை தண்டிக்க எந்த ஆதாரமும் போலீஸ் வசம் இல்லை என்பதை விசாரணையின்போதே தெரிந்துகொண்டேன். எனக்கு பயமோ, கவலையோ இல்லை. எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்" என்றார்.



from Latest news https://ift.tt/qRkbs9j

Post a Comment

0 Comments