தததககட: 30 நமடம வசககபபடட மகட; வளய வநத 23 பமபகள - அதரநத அதகரகள!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை, ஊரின் மையப் பகுதியில் இருக்கிறது. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட பழைய டயர்களை அடுக்கிவைத்திருக்கின்றனர். டயர்களுக்கு இடையில் புற்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் டயர்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதுடன், சுகாதாரச் சீர்கேடும் நிலவிவருகிறது.

பயன்பாடற்ற டயர்கள்

அதே நேரத்தில் பழைய டயர்களுக்கிடையில் விஷப்பாம்புகள் ஊர்ந்து செல்வதுடன், குடியிருப்புப் பகுதிகளிலும் சென்றுவிடுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு குடியிருப்புப் பகுதிக்குள் நல்ல பாம்பு சென்று முதியவர் ஒருவரை தீண்டியிருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதால் பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் அச்சப்படுகிறார்கள். இதனால், குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் அச்ச உணர்வுடன் இருக்கின்றனர்.  

இந்த நிலையில், `அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை வளாகத்தின் உள்ளே பயன்பாடற்ற டயர்கள் அப்புறப்படுத்தப்படாததால் அங்கு விஷப்பாம்புகள் அதிகம் நடமாடுவதாகவும் அதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்' என சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் பணிமனைக் கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து ஆறுமுகநேரி, திருச்செந்தூர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஐந்து பாம்பு பிடிக்கும் நபர்கள், ஸ்ரீவைகுண்டம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு வரவழைக்கப்பட்டனர்.

பிடிபட்ட பாம்புகள்

பணிமனை வளாகத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த பயன்பாடற்ற டயர்கள் இருக்கும் பகுதியில் பாம்பு பிடிக்கும் நபர்கள் மகுடியை ஊதினர். மகுடிச் சத்தம் கேட்டு பாம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வரத் தொடங்கின. மகுடி வாசிக்கப்பட்ட 30 நிமிடங்களில் நல்ல பாம்பு, கட்டுவீரியன், சாரை என 23 பாம்புகள் பிடிபட்டன. அணிவகுத்து நின்ற பாம்புகளைப் பார்த்து போக்குவரத்துப் பணிமனைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விரைவில் மழைக்காலம்  தொடங்கவிருக்கும் நிலையில், பயன்பாடற்ற டயர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.



from Latest news https://ift.tt/Kin0CYq

Post a Comment

0 Comments