சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கலந்துக்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "2021-ம் ஆண்டு நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்றத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தும் அண்ணாமலையால் வெற்றிபெற முடியவில்லை. அவரை செந்தில் பாலாஜி தோற்கடித்தார். அதன் காரணத்தால் தான் தற்போது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு முழுக்காரணம் அமித் ஷாவும், அண்ணாமலையும் தான்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/eeb8ddda-f6a5-4181-b6d7-1189b1433957/IMG_20230614_225506.jpg)
ரெயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 4 துறைகளை கவனித்து வருகிறார். அவரை சந்தித்து ரெயில்வே பிரச்னைகள் குறித்து பேசமுடியவில்லை. ஓடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டணி வைக்கும் பட்சத்தில், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடித்தால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் எளிதாக கைப்பற்றும்.
2015-ம் ஆண்டு பிப்ரவரியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதன்பின், இன்றுவரை கட்டுமானப்பணிகள் தொடங்கவில்லை. இந்தநிலையில், மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டு விட்டதாகவும், அதில் மாணவர்கள் படித்து வருவதாகவும் அமித் ஷா கூறியது மிகப்பெரிய பொய்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/9a6370b7-6b36-4290-be01-402961fe5fd2/IMG_20230614_225442.jpg)
உண்மை என்னவென்றால் மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப்பணி இன்னும் டெண்டர் நிலையை கூட எட்டவில்லை என்பதே உண்மைநிலை. எனவே, மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். தேவைப்பட்டால் டெல்லியில் உண்ணாவிரதம் இருப்பேன்.
மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழக மக்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். தி.மு.க., காங்கிரஸை குற்றம் சொல்வதையே மத்திய அமைச்சர் அமித் ஷா அரசியலாக செய்து வருகிறார். தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என்று அமித் ஷா பேசியதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் வழக்கமாக பேசுவதுபோல் இதுவும் பொய் தான். பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் இன்னும் 10 மாதங்களில் புதிய அரசு அமைந்தவுடன் தீர்க்கப்படும்" எனக் கூறினார்.
from Latest news https://ift.tt/61eygnC
0 Comments