`புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். ஏனெனில் விலங்குகளைப் பொறுத்தவரைத் தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள், அனைத்துண்ணிகள் என மூன்று வகை இருக்கும்.
ஊன் உண்ணிகளான புலி, சிங்கம் போன்றவை தாவரங்களை உண்ணாது. அதுபோலவே தான் தாவர உண்ணியான மான் விலங்குகளைத் தின்னாது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/9f80294b-8f9e-479f-81e4-8fc250784b85/antlers_g9c15e9bcd_1280.jpg)
ஆனால் சமூக வலைத்தளத்தில் மான் ஒன்று பாம்பை உண்ணும் வீடியோ ஒன்று வெளியாகி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா (Susanta Nanda), வன உயிரினங்களின் வியக்கவைக்கும் வீடியோக்களை அடிக்கடி பகிர்வதுண்டு. அந்த வகையில் மான் ஒன்று பாம்பை மெல்லும் காட்சியை காரில் சென்ற ஒருவர் படம்பிடித்திருக்கிறார்.
இந்த வீடீயோவை சுசாந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இயற்கையை நன்கு புரிந்துகொள்ள கேமராக்கள் உதவுகின்றன. தாவரத்தை உண்ணும் விலங்குகள் சில நேரங்களில் பாம்புகளை உண்ணும்" என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து, மான் எப்படி பாம்பை உண்ணுகிறது? என்று ஆச்சர்யத்தில் வாயடைத்துள்ளனர்.
``குறிப்பாகக் குளிர்கால மாதங்களில் தாவரங்களில் பாஸ்பரஸ், உப்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் இல்லாத போது, மான்கள் மாமிசத்தை உண்ணலாம்'' என நேஷனல் ஜியோகிராஃபிக் (National Geographic) விளக்கமளித்துள்ளது.
Cameras are helping us understand Nature better.
— Susanta Nanda (@susantananda3) June 11, 2023
Yes. Herbivorous animals do eat snakes at times. pic.twitter.com/DdHNenDKU0
from Latest news https://ift.tt/zUGE2gD
0 Comments