கணணதசன சல மன சடட கலககப படடன சமபவப பரததன - படலசரயர கரணகரன

சினிமா மீது எப்போது ஆர்வம் வந்தது?

``எனக்குப் பூர்வீகம் மதுராந்தகம்தான். நான் ஸ்கூல் படிக்கும்போதே கவிதை மேல நிறைய ஆர்வம் வந்தாச்சு. அதுக்குக் காரணம் என்னோட மானசீக குருநாதர் கவியரசு கண்ணதாசன்தான். அவர்மீது கொண்ட பற்று எனக்கு சினிமா என்ற பாதையைத் திறந்து காட்டுச்சு."

சினிமாவில் நுழைவதற்கான முயற்சியை நீங்க எப்போ தொடங்கினீங்க?

``ஸ்கூல், படிப்பு எல்லாமே முடிச்சதும் பிசினஸ் பண்ணினேன். செம நஷ்டம். அப்போதான் எனக்கு கண்ணதாசன் சார் சொன்னது ஞாபகம் வந்துச்சு ’எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா... என் இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா’, அப்பதான் எனக்கு, நம்ம வாழ்க்கை இது இல்லையே என்ற ஒரு எண்ணம் தோணுச்சு. அதுக்கப்புறம் நம்மளோட தொழில் இது இல்ல அப்படின்னு சொல்லிட்டு சினிமாக்குள்ள வந்தேன்.

கருணாகரன், யுவன்

2004 சினிமாவுக்கு உள்ள வரணும் அப்படின்னு வந்துட்டேன். ஜி என் செட்டி ரோடு அந்தக் கண்ணதாசன் சிலை முன்னாடி நின்னுட்டு யுவன் சார் வீட்டுக்கு பஸ்ட் போலாமா, சிம்பு சார் வீட்டுக்குப் போலாமா அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன், அப்புறம் சீட்டு போட்டுப் பார்க்கும்போது யுவன் சார் வீடு வந்திருச்சு, அப்படியே யுவன் சார் வீட்டுக்குக் கிளம்பிப் போயிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு யுவன் சாரைப் பார்த்தேன், ’நான் ஒரு பாடலாசிரியர் சார்’ அப்படின்னு சொன்னனேன். அவர் என்னோட ஒரு ரெண்டு வரியைக் கேட்டுட்டு, நீ சிம்பு சார போய்ப் பாரு அப்படின்னு அனுப்பி விட்டார். நான் ஆல்ரெடி வல்லவன் படத்துக்கு எழுதலாம் அப்படின்னுதான் இருந்தேன். அதனால அவர் சொன்னது வந்து இன்னும் நல்லா இருந்துச்சு. 

யுவன் சார ரெண்டு நாள்ல பார்க்க முடிந்தது. ஆனால், சிம்பு சார பார்க்கிறதுக்காக அவர் வீட்டு வாசல்ல ரெண்டு மாசம் நான் வந்து காத்துட்டு இருந்தேன். அவர் ஷூட்டிங் போற எல்லா இடத்துக்கும் போவேன். சிம்பு சாரை சுத்தி இருக்க எல்லார்கூடவும் ஒரு நல்ல ஒரு உறவு கிடைச்சது. அதனால, எங்க ஷூட்டிங் நடந்தாலும் போவேன். அதுக்கப்புறம் அவரே கூப்பிட்டு உனக்கு இந்தப் படத்தில் ஒரு பாட்டு இருக்குன்னு சொல்லிட்டு, அனுப்பிட்டாரு. அதுக்கப்புறம் அதே மாதிரி படத்துல ரீமாசென் மேடம் அவங்களுக்குப் பாட்டு கம்மியா இருக்குன்னு கோச்சுக்கிட்டுப் போனாங்க. அப்போ அதுக்கு ஒரு பாட்டு எழுத சொன்னாங்க. நீ போய் யுவன் சார் கிட்ட மியூசிக் வாங்கிட்டுப்போய் பாட்டு எழுதிக் குடுன்னு சொன்னாங்க.. நானும் எழுதிக் கொடுத்தேன். ஆனா நான் பழைய ஆளுங்கறதால, அந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதினேன். அப்போ சிம்பு சார் அத பாத்துட்டு, இது கொஞ்சம் பழசா இருக்கு, கொஞ்சம் மாத்துடா அப்படின்னு சொன்னாரு... நானும் நாளைக்கு மாத்தித் தரேன் சார்னு சொல்லிட்டு மறுநாள் எழுதிக்காட்டினேன்.

கருணாகரன்

’காதல் வந்தாலே மனசு ஏங்கித் தவிக்கும்... காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்’, ’பள்ளிக்கூடம் போனாலும் பாடம் நான் படிக்கலையே... பட்டாம்பூச்சி ஆனாலும் இன்னும் நான் பறக்கலையே.’ அந்தப் பாடுல ஒரு ரெண்டு வரி மட்டும் நான் எனக்காக எழுதினது. அப்புறம் இந்தப் பாட்ட ரெக்கார்டு பண்ணி முடிச்ச உடனே படத்துல பேர் போடுவாங்களா மாட்டாங்களா அப்படின்னு தயக்கம் வந்துச்சு, அப்புறம் பார்த்தா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே சிம்பு சார் என் பெயரைப் படத்துல போடச் சொல்லியிருக்காரு. அது ரொம்பவே ஒரு மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான தருணம்.”

ஒரு மாற்றுத்திறனாளியா பல சவால்களை எதிர்கொள்றதுக்கு ஒரு மன உறுதி வேணும் அத எப்படி நீங்க எதிர்கொண்டீங்க?

”மன உறுதியைத் தாண்டி காலம் எல்லாரையும் ஓர் இடத்துக்குக் கொண்டு போகும். என்னைப் பொறுத்த வரைக்கும் என்னோட சூழலும் நான் இங்கே வந்தது ஒரு காரணம், எங்க குடும்பத்துல யாரும் என்னைத் தடுக்கல. அந்த ஒரு சூழல உருவாக்கித் தந்த இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லணும்.

அதுக்கப்புறம் நான் கௌதம் மேனன் சார பாக்கணும்னு நெனச்சிட்டு இருந்தேன் அப்போ ஒரு நண்பர் மூலமா புரொடியூசர் மதன் அவரோட நம்பர் கிடைத்தது. அதுக்கப்புறம், அவருக்கு போன் பண்ணிட்டு ’நான் பாடலாசிரியர் கருணாகரன், இந்த மாதிரி வல்லவன் படத்துக்கு எழுதியிருக்கேன்’னு சொன்னேன். அவரு உடனே ’தம்பி நாளைக்கு ஆபீஸ் வந்துருங்க’ன்னு சொன்னாரு. அப்போ அங்க ஆபீஸ் போயிட்டு அவரைப் பார்க்கும்போது ‘கௌதம் மேனன் சாரைப் பார்க்கணும்’னு சொன்னேன். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அவரைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது, அப்போ ’வாரணம் ஆயிரம்’ டப்பிங் போயிட்டிருந்தது, அப்போ கௌதம் மேனன் சார் என்னைக் கூட்டு ’என்ன மாதிரி பாட்டு எழுதுவீங்க’ன்னு கேட்டாரு, நான் அவர்கிட்ட ’சார் நீங்க இப்போ ’சென்னையில் ஒரு மழைக்காலம்’ன்னு ஒரு படம் எடுத்துட்டிருக்கீங்க, அதுல த்ரிஷா மேம் போறாங்க, அப்போ சார் பின்னாடி இருந்து பாக்குறாரு, அப்போ ஒரு பாட்டு ’சென்னையிலே ஒரு மழைக் காலம்... உன் புன்னகையால் வானில் ஊர்கோலம்... நீ சிரித்தால் மின்னல் தடுமாறும்... நீ கையை சேர்த்தால் வங்கக் கடல் கரையேறும்’ அப்படின்னு ஒரு நாலு வரி பாடிக் காட்டினேன்... அப்போ திடீர்னு சூர்யா சார் உள்ள வராரு, உடனே கௌதம் மேனன் சார் சூர்யா சார் கிட்ட ’நம்ம படம்தான் கொஞ்சம் லேட் ஆகுதுல்ல, இவருக்கு உங்க புரொடக்‌ஷன்ல சொல்லுங்க’ அப்படின்னு உடனே சொல்லிட்டாரு. சூர்யா சார் ’சரி நாளைக்குக் காலையில வீட்டுக்கு வாங்க’ன்னு சொல்லிட்டாரு.

கருணாகரன்

ஆனா என்ன ஆச்சுன்னா, நான் ஒரு பத்து நிமிஷம் லேட்டா போய்ட்டேன். அதுக்குள்ள சார் கிளம்பிப் போயிட்டாரு... அங்கே இன்னொரு கார் நின்னுட்டிருந்தது. அதுல பார்த்தா கார்த்திக் சார். அவர் வந்து என்ன விஷயம் அப்படின்னு கேட்கும்போது ’நான் பாடலாசிரியர், சூர்யா சாரைப் பார்க்க வந்தேன்’னு சொன்னேன், ’அண்ணன் கிளம்பிட்டாரு’ன்னு சொன்னார். ’அதான் நீங்க இருக்கீங்களே சார், நீங்க ஒரு சான்ஸ் கொடுங்க’ன்னு கேட்டேன். அவரும் ’ ’அலெக்ஸ் பாண்டியன்’ படம் பண்ணுற இயக்குநர் சுராஜ் சாரைப் போய்ப் பாருங்க’ன்னு சொன்னார், அங்க ரொம்ப நாள் வெயிட் பண்ணுனதுக்கு அப்புறம், கடைசியா ஒரு பாட்டு வந்துச்சு. அந்த ஏற்கெனவே எனக்கு முன்னாடி நிறைய பாடலாசிரியர்கள் எழுதிட்டு எதுவுமே வரல, அதுக்கப்புறம் என்ன ஒரு வாட்டி முயற்சி பண்ணிப் பார்க்கச் சொன்னாங்க அப்போ நான் அதில் எழுதினதுதான் ’நாங்க பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்’ பாடல்.”

நீங்க பல பேருக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கீங்க, எவ்ளோ கஷ்டப்பட்டாலும் உங்களுக்கான விஷயத்தை நீங்க தேடிப் போறீங்க, அது எப்படி?

”இது வந்து, விஷால் சார் சொல்லியிருக்காரு. ஏன்னா, நான் அவரை ’சண்டக்கோழி-1’லிருந்து பாலோ பண்ணிட்டிருக்கேன். எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. கண்டிப்பா இது உங்களுக்குக் கிடைக்கும் அப்படின்னு. அந்த நம்பிக்கை இருந்தாலே எல்லாரையும் ஒரு உந்து சக்தியாக இருந்து கொண்டு போகும். நான் இப்படித்தான் ஆகணும்னு நான் நினைக்கிற கனவு நல்ல கனவாக இருந்தால் கண்டிப்பாக இயற்கை அதுக்கு வழிவகுக்கும்.”



from Latest news https://ift.tt/jGu7WZ0

Post a Comment

0 Comments